பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 கப்பலில் நூற்றிருபது பிரயாணிகள் இருந்தனர். ஆயினும், சவரத்தொழிலாளி ஒருவன்கூட அதிலில்லை. எனவே அபு ஸிர் தன் நண்பனிடம் பேசும் பொழுது, இங்கே மருத்துவ குலத்தைச் சேர்ந்தவன் என்னைத் தவிர வேறு எவனுமில்லை. ஆகையால், நான் என் கத்திப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிரயாணிகளிடையே போனால், எவராவது சிலர் சவரம் செய்யச் சொல்லுவர். காசோ, ரொட்டியோ, குடிதண்ணீரோ கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு நாம் காலம் தள்ளலாம். நாம் பல நாட்கள் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும். ஆதலால், நாள்தோறும் நாம் ஏதாவது சம்பாதித்தால்தான்,நம் உண- -வுக்கு ஏற்பாடு செய்துகொள்ள முடியும்!’ என்று சொன்னான். சாயக்காரன், "சரி, அப்படியே செய்!” என்று சொல்லிவிட்டு, தலையைக் கீழே சாய்த்துக்கொண்டு உறங்கத் தொடங்கினான்.