பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


 -களோ அதுவரை சாப்பாட்டைப்பற்றி நீங்கள் கவலைப்படவே வேண்டாம்"!’என்று சொன்னார்.
 பின்னர், மருத்துவன் தன் இடத்திற்குத் திரும்பினான். அங்கே அப்பொழுதும் உறங்கிக்கொண்டிருந்த நண்பனை எழுப்பினான். அவன் எழுந்ததும்,தனக்கு முன்னால் வைத்திருந்த ரொட்டிகளையும், காய்,கனிகளையும் பார்த்து, இவைகளையெல்லாம் எங்கிருந்து பெற்றாய்?’ என்று கேட்டான். 'அல்லாஹ்வின் அருளிலிருந்து!' என்றான் அபு ஸிர். உடனே அபு கிர் உணவுப் பொருள்களை உண் பதற்காகப் பாய்ந்திருப்பான்: அதற்குள் அவன் நண்பன், இவைகளை நீ உண்ண வேண்டாம், சகோதர இவற்றை அப்படியே வைத்திருந்தால், மற்றொரு சமயத்திற்கு உதவும். இப்பொழுது இரவுச் சாப்பாட்டிற்காக இந்தக் கப்பலின் கப்பித்தான் நம் இருவரையும் அழைத்திருக்கிறார். நாம் அவருடன் போய் உணவருந்து வோம். இனிமேலும் தினந்தோறும் நமக்கு இராச் சாப்பாடு அவருடன்தான்!” என்று சொன்னான். ஆனால் அபு கிர், கப்பல் யாத்திரையால் தனக்குத் தலைக் கிறுகிறுப்பு ஏற்பட்டிருப்ப தாயும், தான் அங்கே இருந்தவைகளையே உண்பதாயும் சொன்னான். அபு ஸிர், சரி, சாப்பிடு!’ என்று சொன்னான்.
அபு கிர் உணவுப்பொருள்களின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். ரொட்டிகளை அவன் கடித்துத் தின்றதும், தண்ணீரை "மடக்கு. மடக்கு" என்று குடித்ததும் எல்லாம் விலங்குகள் பசியோடு உண்பனபோலவே இருந்தன. காய்ந்த மாடு கம்புக் கொல்லையில் விழுந்து உழக்குவது போல அவன காட்சியளித்தான். யானை கவளங்களை விழுங்குவது போல் அவன் ரொட்டிகளையும் கனிகளையும் விழுங்கினான். அவனுடைய இரண்டு கைகளும் வாயும் இடைவிடாமல் வேலை செய்துகொண்டிருந்தன. அபு ஸிர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே எதிரில் அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் ஒரு மாலுமி அங்கே வந்து,"கப்பித்தான் சாப்பாட்டிற்காக உங்களை அழைக்கிறார். உங்கள் நண்பரையும் கூட்டிவரச் சொன்னார் !"என்றான்.