பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
           10



அப்பொழுதும் அபு ஸிர் தன் நண்பனை அழைத்தான். ஆனால் அவன், "என்னால் நடக்க முடியாது!" என்று சொல்லிவிட்டான். ஆகவே, அபு ஸிர் மட்டும் தனியாகச் சென்றான். அவன் கப்பித்தான் அறையில் நுழையும்பொழுது, அவருடன் பல மாலுமிகளும் அமர்ந்திருந்தனர் ; மேசைகளின்மீது தட்டுகளில் பல வகையான உணவுப் பண்டங்கள் வைக்கப்பெற்றிருந்தன. அவனைக் கண்டதும், கப்பித்தான் அவனை வரவேற்று. உமது நண்பர் எங்கே?' என்று விசாரித்தார். மருத்துவன் தன் நண்பனுக்குத் தலைக் கிறுகிறுப்பு ஏற்பட்டிருப்பதாயும், அவனால் நடக்க முடியவில்லை என்றும் தெரிவித்தான். சில நாட்களுக்குக் கப்பல் நோய் அப்படித்தான் இருக்கும்; பிறகு சரியாகப் போய்விடும் ! அவருக்கு வேண்டிய உணவை நீர் முதலில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வாரும். அதுவரை நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம்!” என்று சொல்லி, ஒரு