பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


பெரிய பாத்திரத்தில் உணவுத்தட்டுகளை எடுத்து வைக்க ஏற்பாடு செய்தார். அபு ஸிர் அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய்ச் சாயக்காரனிடம் வைத்தான். அந்தப் பாத்திரத்தில் பத்துப் பேர்கள் உண்ணக்கூடிய அளவு ரொட்டிகளும், சோறும், கறிகளும் இருந்தன. அப்பொழுதும் சாயக்காரன் முன்னால் வந்திருந்த ரொட்டிகளைப் பற்களால் அரைத்து உள்ளே தள்ளிக்கொண்டுதான் இருந்தான். அவனைப் பார்த்து அபு ஸிர், இவைகளை உண்ண வேண்டாமென்று நான் அப்பொழுதேசொல்லவில்லையா? கப்பித்தான் மிகவும் நல்ல மனிதர். உனக்கு உடம்பு சரியாயில்லை என்று நான் அவரிடம் சொன்னேன். உடனே அவர் உனக்கும் உணவு எடுத்துவைக்க உத்தரவிட்டார் !’ என்று சொன்னான்.

 அந்தப் பாத்திரத்தை இப்படி நகர்த்து!’ என்றான் அபு கிர். மருத்துவன் அதை அவன் அண்டையில் தூக்கி வைத்தான். உடனேயே அபு கிர் அதிலிருந்த தட்டுகளை வெளியே எடுத்து, நாய்கள் உறுமிக்கொண்டே சோற்றைக் கெளவுவதுபோல், சோற்றையும் கறிகளையும் அள்ளி அள்ளி விழுங்கத் தொடங்கினான். அந்நிலையில் அபு ஸிர் அங்கிருந்து கப்பித்தான் அறையை நோக்கிப் புறப்பட்டான்.
கப்பித்தானுடைய விருந்தில் எல்லாப் பண்டங்களும் சுவை யாக இருந்தன. உணவுக்குப் பின்னால் எல்லோரும் காப்பியும் பருகினர். விருந்து முடிந்தபின், அபு ஸிர் தன் இடத்திற்குத் திரும்பினான். அங்கே அவன் கொண்டுபோய் வைத்திருந்த பாத்திரத்தில் வெறும் தட்டுகளே இருந்தன உணவு முழுவதையும் அபு கிர் காலி செய்திருந்தான். காலிப் பாத்திரத்தை அவன் கப்பித்தானுடைய வேலை ஆட்களிடம் கொடுத்துவிட்டு வந்து, இரவில் நன்றாக உறங்கினான்.
மறுநாளும் அபு ஸிர் பலருக்கு முடி வெட்டியும், சவரம் செய்தும், ஏராளமான ரொட்டிகள், இறைச்சி முதலியவைகளைப் பெற்றான். அவைகளையெல்லாம் முன்போல் அவன் தோழனிடம் கொண்டுபோய்ச் சேர்த்தான். அத்தோழனோ, வந்தவைகளையெல்லாம் வயிற்றிலே அடக்கம் செய்து வந்தான். அவன் இருந்த இடத்தை விட்டு எழுவதேயில்லை.