பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

<3b/>.

நகரிலே யாத்திரிகர்கள் தங்கும் விடுதி ஒன்றில் சாயக்காரனும் மருத்துவனும் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அதிலே தங்கியிருந்தனர். அபு ஸிர் வெளியே சென்று சமையலுக்கு வேண்டிய ஒரு பானையையும், சிறு சட்டி களையும், உணவுக்கு வேண்டிய பொருள்களையும் வாங்கி வந்து, விரைவிலே சமையல் செய்து முடித்தான். அறையில் நுழைந்தது முதலே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சாயக்காரன் தட்டில் சோறு படைத்த பிறகே எழுந்திருந்தான். எழுந்ததும், சாப்பிடத் தொடங்கினான். சாப்பாடு முடிந்ததும், அவன், என்னைக் குறை சொல்லாதே எனக்குக் கிறுகிறுப்பா யிருக்கிறது!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் பள்ளிகொண்டு விட்டான்.

இவ்வாறு அவன் நாற்பது நாட்களாக, எழுந்து நடமாடா மலும், ஒரு வேலையும் செய்யாமலும், காலம் கழித்து வந்தான். ஆனால், அபு ஸிர் ஒவ்வொரு நாளும் கத்திப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, நகரத்தின் பல பகுதிகளுக்குச் சென்று, தன் தொழிலைச் செய்து வந்தான். ஒவ்வொரு நாளும் திரும்பி வந்துதான் சாயக்காரனை எழுப்ப வேண்டும். எழுந்ததும், அவனுக்கு உணவு தயாராயிருக்க வேண்டும். உண்டு முடிந்ததும், அவன் மீண்டும் உறங்கத் தொடங்கி விடுவான். சில சமயங்களில் மருத்துவன், எழுந்து உட்காரு ! வெளியே சிறிது நடந்து சென்று, காற்று வாங்கிக்கொண்டு, நகரை ஒரு முறை சுற்றிப் பார்! இந்நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. மக்கள் உற்சாகமாயிருக்கின்றனர். காலாற நடந்தால், நோய் தானாகவே போய்விடும்!” என்று அவனிடம் சொல்லுவான். அவன், ‘என்னைக் குறை சொல்லாதே, எனக்குக் கிறுகிறுப்பாயிருக்கிறது !" என்றே பதில் சொல்லிவிடுவான். அவன் மனம் வருந்தும்படி கடிந்து பேசவோ, அவனுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தவோ அபு