பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


"மஞ்சள் ?" "அதுவும் தெரியாது.”

 அபு கிர் தனக்குத் தெரிந்த சாயங்களின் நிறங்களை யெல்லாம் கூறிப் பார்த்தான். அப்பொழுது கடைக்காரன் பின் கண்டவாறு தெரிவித்தான் : “இந்த நகரிலே நாங்கள் நாற்பது பேர்கள் சாயக்காரர்கள் இருக்கிறோம். எங்களில் ஒருவர் இறந்தால், இறந்தவர் மகனுக்கு நாங்கள் சாயம் காய்ச்சக் கற்றுக் கொடுக்கிறோம். இறந்தவருக்கு மகனே இல்லையென்றால் எங்களில் ஒருவர் குறைவு என்று வைத்துக் கொள்வோமே தவிர, வெளியிலே மற்றொருவருக்குச் சொல்லிக் கொடுப்பது கிடையாது. ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால், ஒரு பிள்ளைக்குத்தான் சாயத் தொழிலைக் கற்பிப்போம். அவன் இறந்து போனால்தான், அடுத்த பிள்ளைக்குக் கற்பிப்போம். இவ்வாறு எங்களுடைய தொழில் கண்டிப்பான கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டது. நாங்கள் அனைவரும் நீல நிறத்தைத் தவிர, வேறு எந்தச் சாயமும் காய்ச்சுவதில்லை  "எங்களுக்குத் தெரிந்த வர்ணம் அது ஒன்றுதான் !"
  அதைக் கேட்ட அபு கிர், "நானும் ஒரு சாயக்காரன் தான். எல்லா வர்ணங்களிலும் எனக்குச் சாயம் காய்ச்சத் தெரியும். என்னை நீர் உம்மிடம் வேலைக்கு வைத்துக் கொண்டால், எனக்குத் தெரிந்த தொழில் நுட்பங்களை யெல்லாம் உமக்குச் சொல்லித் தருகிறேன். அதனால் நீர் மற்ற சாயக்காரர்களை விட மேலான நிலையை அடையலாம்!” என்று சொன்னான்.

"வெளியார்களை நாங்கள் எங்கள் தொழிலில் வைத்துக் கொள்வதில்லை !" "நானாகச் சொந்தத்தில் ஒரு சாயப் பட்டறை வைத்துக் கொள்ளலாமா ?” "அதற்கும் நாங்கள் சம்மதிக்க மாட்டோம் !" அதற்கு மேல் அபு கிர் அங்கே நிற்கவில்லை. அவன் வெளியே சென்று, மற்றொரு சாயக்காரனைக் கண்டு