பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


பேசினான். அவனும் முதலாவது கடைக்காரன் சொன்னவை களையே திரும்பச் சொன்னான். அபு கிர் மேலும் பலரை விசாரித்ததில், அவர்களும் அவ்வண்ணமே சொன்னார்கள். எவரும் அவனை வேலைக்கு வைத்துக்கொள்ள இசைய வில்லை : பயிற்சிக்குக்கூடச் சேர்த்துக்கொள்ள விரும்ப வில்லை. பிறகு, அவன் சாயக்காரர்களின் தலைவனான வேடிக்கிடம் சென்று விசாரித்தான். அவனும் அந்நியருக்குத் தங்கள் தொழிலில் இடமில்லை என்று கூறிவிட்டான். அதற்குப் பின் அபு கிர் மிகவும் வருத்தமும் கோபமும் அடைந்து, நேரே நகரின் மன்னருடைய அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கே அவன் அரசரைப் பேட்டி கண்டு பேசினான் : * அரசே! நான் வெளி நாட்டவன். என் தொழில் சாயம் காய்ச்சுதல். இந்த நகரத்திலே உள்ள சாயக்காரர்களை நான் கண்டு பேசினேன். அவர்களுக்கு நீல நிறத்தைத் தவிர, வேறு சாயமே தெரியாது. அவர்கள் அனைவரும் என்னை வேலைக்கு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். அவர்களுடைய தலைவரான ஷேக்கையும் நான் கண்டு பேசிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை. அவர்களில் எவரும் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை. நான் பல வர்ணங்களில் சாயம் காய்ச்சுவேன். வானவில்லிலே காணும் நிறங்கள் அத்தனையையும் நான் துணிகளில் ஏற்றிக் காட்ட முடியும். சிவப்பு நிறம் என்றால், அதிலேயே ரோஜாப் பூவின் மெல்லிய சிவப்பிலிருந்து பவளத்தின் முற்றிய சிவப்பு வரை பல வர்ணங்கள் தயாரிக்க முடியும். பச்சையிலும் இலைப் பச்சை, புல்லின் பச்சை, கிளிப்பச்சை முதலிய வகைகள் உண்டு. கறுப்பு நிறத்தில் மை போன்ற கறுப்பு, காக்கைக் கறுப்பு, நிலக்கரிக் கறுப்பு முதலிய வண்ணங்களைக் காட்ட லாம். மஞ்சளை எடுத்துக்கொண்டால், எலுமிச்சம்பழம் போன்ற மஞ்சள், தங்கம் போன்ற மஞ்சள், ஆரஞ்சு முதலிய பல வகை உண்டு. இவைகளைப் போலவே இன்னும் பல வண்ணங்களில் நான் துணிகளைத் தயாரிக்க முடியும். வண்ணங்களில் ஒன்றோடு ஒன்றைக் கலந்து நூற்றுக்கணக்-

ந ந._2