பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20


கருவிகள், தளவாடங்கள் முதலியவை வாங்க வேண்டிய விவரத்தையும் கூறினான். உடனே மன்னர் நாலாயிரம் பொற்காசுகளை அள்ளிக்கொடுத்து, "இவற்றை மூலதனமாக வைத்துக்கொண்டு தொழிலைத் தொடங்கு !சாயத் தொழிற் சாலை எப்படி வேலை செய்கிறது என்பதைச் சீக்கிரத்திலே பார்ப்போம்!” என்று கூறினார்.

   அபு கிர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சந்தைக்குச் சென்று தேவையான பொருள்களையெல்லாம் வாங்கினான். பல வண்ணங்களில் சாயமேற்றுவதற்காக அரசர் ஐந் நூறு "பீசுகள்"துணி அனுப்பியிருந்தார். அவன் அவைகளை வித விதமான வண்ணங்களில் சாயமேற்றித் தன் தொழிற்சாலையின் முன் பக்கத்திலும் மாடத்திலும் கொடிகளில் தொங்கவிட்டான். அந்த வழியாகச் சென்ற மக்கள், தாங்கள் அம்மாதிரியான அற்புதத்தைக் கண்டதில்லை ஆதலால், அங்கே சிறிது நேரம் நின்று, கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பலர் தொழிற்சாலை வாயிலில் கூட்டமாகக்கூடி,