பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


"ஐயா, இந்த வண்ணங்களின் பெயர்கள் என்ன?’ என்று வினவினார்கள். அபு கிர், சலிப்பில்லாமல் அவர்களுக்கு வேண்டிய மறுமொழிகளைச் சொல்லிக்கொண்டிருந்தான். அதிலிருந்து ஜனங்களும் ஏராளமான துணிகளைக் கொணர்ந்து சாயம் பிடிப்பதற்காக அவனிடம் கொடுத்து வந்தார்கள். 'கூவி எவ்வளவானாலும் தருகிறோம். சாயம் நல்லதாயிருக்க வேண்டும்' என்று அவர்கள் கூறினார்கள். அரசர் அனுப்பிய துணிகளையெல்லாம் சாயமேற்றி முடிந்ததும், அபு கிர் அவைகளை எடுத்துக்கொண்டு, அவருடைய கொலு மண்டபமாகிய திவானில் கொண்டுபோய்க் காட்டினான். அரசர் அவைகளைப் பார்த்ததும் உள்ளம் பூரித்து, அவனுக்குப் பல பரிசுகளை அளித்துப் பாராட்டினார். அதிலிருந்து அரசருடைய படை வீரர்கள் அனைவரும், தங்கள் அணிகளையெல்லாம் அவனுக்கு அனுப்பி, குறித்த சாயங் களேற்றித் தரும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களிடமிருந்து அவனுக்கு வெள்ளியும் பொன்னுமாக வந்து குவிந்து கொண்டிருந்தன. அவனுடைய புகழ் எங்கும் பரவலாயிற்று. அவனுடைய தொழிற்சாலையை மக்கள் சுல்தானின் தொழிற் சாலை" என்றே கூறி வந்தனர். நாளுக்குநாள் அவனுடைய தொழில் பெருகி வந்தது. நகரிலிருந்த மற்றைச் சாயக்காரர் களும் அவனிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தங்களுக்கும் தொழிலைக் கற்பிக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். ஆனால், அவன் யாரையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். அவனிடம் செல்வம் குவிந்துவிட்டது. எராளமான கறுப்பு அடிமைகளும், பணிப்பெண்களும் சேர்ந்துவிட்டனர். எப்பொழுதும் அவனுக்கு அரசருடைய தயவும் இருந்து வந்தது. ஆகவே, அவன் பழைய சாயக்காரர்களைச் சிறிதும் மதிக்கவில்லை. அபு கிர்ரின் நிலைமை இவ்வாறிருக்க, இனி அவனுடைய நண்பனான அபு ஸிர்ரைப்பற்றிக் கவனிப்போம். அவன் சேர்த்து வைத்திருந்த பணமும் போய், அவனும் அறைக் குள்ளே நினைவற்றுக் கிடந்தான். அறையின் கதவும் அடைத்தே இருந்தது. விடுதியின் வேலையாள், அந்த-