பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 22 அறையிலிருந்த இருவரையும் காணாமல், மூன்று நாட்களாகப் பேசாமலிருந்தான். மூன்றாவது நாள் மாலைவரை அவன் அறையில் ஆளேயில்லை என்று எண்ணியிருந்தான். அறைக்கு வர வேண்டிய வாடகையும் வரவில்லை. எனவே, அவன் அன்று இருட்டியவுடன், என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே, அந்த அறைப்பக்கம் சென்றான். உள்ளே மருத்துவன் முனகிக்கொண்டிருப்பது அவன் செவியிலே பட்டது. திறவுகோலும் பூட்டும் வாயிலிலேயே இருந்ததை அவன் கண்டான். உடனே கதவைத் திறந்து, அவன் உள்ளே சென்று பார்த்தான். அபு ஸிர் படுத்தவண்ணம் முனகிக்கொண்டிருந்தான். வேலையாள் அவனை நோக்கி, *ஒன்றும் பயப்பட வேண்டாம்! உமது நண்பர் எங்கே?” என்று கேட்டான். அபு ஸிர், ஆண்டவன் அறியச் சொல்லு கிறேன், இன்றுதான் எனக்குச் சுயநினைவு வந்தது: மெல்லக் கூவிப் பார்த்தேன் பதில் பேச இங்கே யாருமில்லை!” என்றான். அவன் மேலும் கூறியதாவது: "ஆண்டவன்தான் உனக்கு அருள் புரிய வேண்டும்! என் தலையணை அடியில் என் பணப்பை இருக்கிறது. அதிலிருந்து இரண்டரை திர்ஹாம் எடுத்து, நல்ல உணவு எதாவது வாங்கிவர ஏற்பாடு செய்” என்றும் வேண்டினான்.

வேலையாள் பையை எடுத்துப் பார்த்தான்; அது காலியாய் இருந்தது. அதை அவன் அபு ஸிர்ரிடம் சொன்னான். உடனே அபு ஸிர், தன் நண்பன் அபு கிர்ரே பணத்தை அடித்துக்கொண்டு போய்விட்டான் என்பதை உணர்ந்து, 'என் நண்பரை நீ பார்த்தாயா?’ என்று கேட்டான். ‘மூன்று நாட்களாக நான் அவரைப் பார்க்கவேயில்லை. நீங்கள் இருவருமே வெளியேறிப் போய்விட்டீர்களோ என்று நான் இது வரை எண்ணியிருந்தேன்.” இல்லை, இல்லை! என் நண்பரே என் பணத்தின்மீது ஆசை வைத்து. நான் நோயுற்றிருப் பதைக் கண்டு, அதை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்' என்று மருத்துவன் சொன்னான். அவன், வருத்தம் தாங்காமல், அழுது அரற்றத் தொடங்கினான். அப்பொழுது வேலையாள்: "உமக்கு ஒரு கேடும் வராது; அவருடைய செயலுக்கு-