பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


போய்க் குளியுங்கள் !’ என்று சொன்னான். அவன் அரசர் கூடக் கடலிலேதான் குளிப்பதாகவும் அவன் தெரிவித்தான். அபு ஸிர் மேலும் சிலரிடம் விசாரித்த பின்னர்,அரண்மனைக்குச் சென்று அரசரையே கண்டு பேசலாம் என்று எண்ணிச் சென்றான்.

 அவன் மன்னர் பெருமானைத் திவானிலே தரிசித்து, தரையில் விழுந்து வணங்கி எழுந்தான். அவருக்கு ஆண்டவன் அருள் பெருக வேண்டுமென்று சொல்லிவிட்டு, அவன், நான் ஒர் அந்நியன்: குளிக்கும் அறை அமைத்து நடத்துவது என் தொழில். இங்கே நான் குளிப்பதற்காகக் குளிப்பறையான ஹம்மாமைத் தேடிப் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். ஆனால் ஒன்றுகூட என் கண்ணிலே படவில்லை. எழில் மிகுந்த இதைப் போன்ற ஒரு நகரில் ஹம்மாம் இல்லாதது பெருங் குறையாகும். இந்த உலகிலே ஹம்மாமில் குளிப்பதைப் போன்ற சுகம் வேறு எதிலும் கிடைக்காது!" என்று கூறினான். அரசர் ஹம்மாம் என்பது என்ன மாதிரி இருக்கும் என்று கேட்டார். மருத்துவன் அதைப்பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னான். “இங்கே ஒரு பெரிய ஹம்மாம் அமைந்தால்தான் இந்தத் தலை நகரைச் சிறந்த நகர் என்று சொல்ல முடியும்!" என்றும் அவன் தெரிவித்தான், உடனே மன்னர், "உன் வரவு நல்வரவுதான்!” என்று சொல்லி, அவனுக்கு அழகான உடைகளை அளித்துக் கெளரவித்தார். அவனுக்காக ஒரு குதிரையும்,வசிப்பதற்கு ஒரு விடும், அவன் ஏவும் பணிகளைச் செய்ய இரண்டு கறுப்பு அடிமை களும், நான்கு பணிப்பெண்களும், நான்கு வெள்ளை நிற வேலைக்காரர்களும் மன்னர் அளித்து, முன்பு அபு கிர்ருக்கு அளித்த மரியாதையைவிட மிக அதிகமான மரியாதையுடன் அவனை நடத்தத் தொடங்கினார்.
 அரசர் கொற்றர்களையும், சிற்பிகளையும் வரவழைத்து, அவர்களுக்கு அபு ஸிர்ரை அறிமுகம் செய்து, அவன் குறிப்பிடுகிற இடத்தில் விரைவிலே ஓர் உயர்ந்த ஹம்மாமைக் கட்டி முடிக்க வேண்டுமென்று உத்தரவு செய்தார்.
நகரிலே நல்லதான ஒரிடத்தில் ஹம்மாமைக் கட்டவேண்டு மென்று அபு ஸிர் சுட்டிக் காட்டினான். கொற்றர்களும் சிற்பிகளும், அவனுடைய கருத்துகளை நன்றாக மனத்திலே வாங்கிக் கொண்டு, கட்டட வேலையைத் தொடங்கினார்கள். அவனும்-