பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை




அதிலிருந்து மூன்று நாட்களுக்கு அங்கே வந்து குளிப்பவர்கள் யாதொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று அபு ஸிர் முன்னதாகவே தெரிவித்திருந்தான். அதனால் பெருவாரியான மக்கள் அங்கே வந்து குளித்தனர். வேலையாள்களும் அடிமைகளும் அவர்களுக்குச் செய்த உபசாரங்களைக் கண்டு, அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அரசர்கள், பிரபுக்களைத் தவிர வேறு எவரும் அத்தகைய ஹம்மாமில் குளிக்க இயலாது. எனவே, சாதாரண மக்கள் தங்களுக்கு அந்தப் பேறு கிடைத் ததில் பெருமகிழ்ச்சி கொண்டனர். நான்காவது நாளில் அபு ஸிர் மன்னரை ஹம்மாமுக்கு அழைத்து வந்தான். அவருடன் பல பிரபுக்களும், மந்திரிகளும் வந்தனர். மன்னர் உடைகளைக் களைந்ததும், அபு ஸிர் சிறு மெத்தைகள் போன்ற கையுறைகளை அணிந்துகொண்டு, அவர் உடலை மெதுவாகத் தேய்த்து, நீர் வார்த்துச் சுத்தம் செய்தான். பிறகு, பன்னீர் கலந்த தண்ணீரில் அவரை அமிழ்ந்து குளிக்கும்படி செய்தான். அதிலிருந்து அவர் வெளியே வந்ததும், என்றுமில்லாத முறையில் உடல் மென்மையாகி, தமக்குப் புதிய ஊக்கமும் உற்சாகமும் தோன்றியிருப்பதை உணர்ந்தார். அதன் பிறகு-