பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவரை அபு ஸிர் ஒரு மேடையிலே அமரச் செய்தான். இளைஞர்கள் அவருடைய உடலையெல்லாம் பிடித்துவிட்டு, தலையையும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு தேய்த்தனர். நாலு பக்கங் களிலிருந்தும் நறுமணப் புகை இன்பமளித்துப் பரவிக் கொண்டிருந்தது. மன்னர் பேரானந்தம் அடைந்தார். அவரைப் போலவே அமைச்சர்களும் பிரபுக்களும் அங்கு குளித்ததில் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர். அரசர் அபு ஸிர்ரை நோக்கி, “ஹம்மாமின் அதிப ! இந்தக் குளிப்பறைகள் ஏற்படு முன்னால் என் நகரம் சிறப்பான நகரமாய் இருக்கவில்லை. இங்கே குளிப்பதற்கு ஒரு நபருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறாய்!” என்று கேட்டார். 'தங்கள் யோசனைப்படியே செய்யக் காத்திருக்கிறேன்!” என்றான் அவன். "ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரம் பொற்காககள் வசூலிப்பது-