பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


நல்லது !" என்றார் அரசர். அபு ஸிர், “அரசர் பெரும ! எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகச் செல்வம் படைத்தவர்கள் அல்லர்: அவர்களிலே செல்வர்களும் இருக்கிறார்கள், ஏழைகளும் இருக்கிறார்கள். ஆள் ஒன்றுக்கு ஆயிரம் தினார் வீதம் நான் வாங்குவதானால். ஹம்மாம் காலியாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஏழைகளால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது !" என்று கூறினார். அரசர், அப்படியானால் நீ என்ன கட்டணம் விதிக்க முடியும் !’ என்று கேட்டார். அதை அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம். ஒவ்வொருவரும் தம் விருப்பப்படி இயன்றதைக் கொடுக்கட்டும். அவரவர் சக்திக்குத் தகுந்தபடி மக்கள் அளிப்பார்கள். அந்த முறையில் நமது ஹம்மாம் எப்பொழுதும் மக்களால் நிறைந்திருக்கும். தொழிலும் நன்கு நடைபெறும். ஆனால், ஆயிரம் தினார்கள் என்பது அரசர்களே அளிக்கக் கூடிய சம்மானமாகும் !’ என்று அவன் பதிலளித்தான். மற்றைப் பிரபுக்களும் அவன் சொன்னதை ஆமோதித்தனர். எல்லோரும் தங்களைப் போல அள்ளிக் கொடுக்க முடியுமா?’ என்றும் அவர்கள் கேட்டனர். மன்னர், வெளி நாட்டிலிருந்து இங்கு வந்து, நம் நகருக்கே பெருமையை அளிக்கும் இந்த ஹம்மாமை அமைத்து நடத்து வதற்கு, நம் மக்கள் இவனுக்குத் தக்க கைம்மாறு செய்ய வேண்டாமா ? சில ஆண்டுகளுக்குப் பின் இவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்ல விரும்பினால், அப்பொழுது வெறுங் கையோடு செல்வதா ? இவற்றையெல்லாம் கருதித்தான் நான் உயர்ந்த கட்டணம் விதிப்பது நலமென்று கருதினேன். ஆனால், நீங்கள் சொல்லுவதும் பொருத்தமாய்த் தோன்றுகிறது !’ எனறாா. அப்பொழுது பிரபுக்கள்,அபு ஸிர்ருக்கு எவ்வளவு பொருள் அளித்தாலும் தகும் என்றும், அரசர் தமது பொக்கிஷத்திலிருந்து அவனுக்குப் பெரு நிதிகள் அளித்து வர வேண்டும் என்றும், அந்த நிதிகளால் பொது மக்களே பயனடைவார்கள் என்றும் எடுத்துக் காட்டினார்கள். மேலும், மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் பிரபுக்களாயிருக்கும் எங்களுக்குக்கூட ஒரு முறை ந. ந.-3