பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


-றேன். தவிரவும்,பிரபுக்களிடமிருந்து வந்த அடிமைகளை அவர் களுக்கே நான் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் !’ என்று அவர் தெரிவித்தார்.

அதற்குப் பின் அரசரும் பிரபுக்களும் ஆனந்தமாகப் பேசிக்கொண்டே, அரண்மனைக்குத் திரும்பிச் சென்றனர். அன்றிரவு முழுவதும் அபு ஸிர் உறங்கவேயில்லை. அவனிடம் சேர்ந்திருந்த பொற்காசுகளை எண்ணி, பைகளில் போட்டு, முத்திரை வைக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
 மறு நாள் காலை அவன் ஹம்மாமைத் திறந்தவுடன்,நகரில் விளம்பரம் செய்பவனை அழைத்து, குளிப்பறைகளில் குளிக்க வருவோர் அவரவர் சக்திக்கும், தாராளச் சிந்தைக்கும் தக்கபடி, விருப்பம் போல் கட்டணம் செலுத்தலாம் என்று எங்கும் விளம்பரம் செய்யும்படி கட்டளையிட்டான். அன்று முதல் அவனிடம் இருபது வெள்ளை இளைஞர்களும், இருபது கருப்பு அடிமைகளும், நான்கு அடிமைப் பெண்களும் வேலை செய்து வந்தனர். அன்றும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குளித்துவிட்டுச் சென்றனர். மாலையில் அவனுடைய பெட்டி நிறையத் தங்க நாணயங்கள் குவிந்திருந்தன.

ஹம்மாமின் பெருமையைப்பற்றிக் கேள்விப்பட்ட மகாராணி தானும் அங்கு குளிக்க வேண்டுமென்று ஒரு நாள் ஏற்பாடு செய்திருந்தாள். அன்று அபு ஸிர் அங்கிருந்த ஆடவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டுத் தானும் வெளியே சென்றுவிட்டான். பணிப்பெண்கள் மகாராணிக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்தனர். அவள் அங்கிருந்த வசதிகளை மெச்சி, ஆயிரம் தினார்களை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அதிலிருந்து அபு ஸிர், ஆடவர்கள் முற்பகலில் குளிப்பதற்கும், பெண்டிர்கள் பிற்பகலில் குளிப்பதற்கும். ஏற்பாடு செய்தான். நாளுக்கு நாள் ஹம்மாமின் புகழ் பெருகி வந்தது. மேலும் மேலும் அதிகமான மக்கள் அதை நாடி வந்தனர். எழைகள், பணக்காரர்-எவர் வரினும், அபு ஸிர் புன்முறுவலோடு அவர்களை வரவேற்று உபசரித்து அனுப்பி வந்தான். பெரிய-