பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

<6b><bவஞ்சனையால்வந்த கேடுb/> கனவான்கள் பலர் நகரிலே புதிதாக அமைந்த ஹம்மாமைப்பற்றிச் சாயத் தொழிற்சாலை முதலாளியான அபு கிர்ரிடம் புகழ்ந்து பேசினார்கள். அது பூலோக சொர்க்கம் !’ என்று அதில் அமைந்துள்ள அற்புதங்களைப்பற்றி வியந்து கூறினார்கள். இப்படி மக்களின் மனத்தைக் கவர்ந்துள்ள குளிப்பு நிலையத்தை நாமும் ஒரு முறை பார்த்து வர வேண்டியது அவசியம். உலகம் போகிற போக்கில் நாமும் சேர்ந்தே போக வேண்டும்!" என்று அபு கிர் எண்ணமிட்டான். ஒருநாள் அவன் ஆடம்பரமான உடைகள் அணிந்துகொண்டு, குதிரைமீது அமர்ந்து, ஹம்மாமுக்குப் புறப்பட்டுச் சென்றான். அவனுக்குமுன்னால் இரண்டு அடிமைகளும், பின்னால் இரண்டு அடிமைகளும் சென்றனர்.