பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

"அப்படியானால், ஆண்டவன்தான் தங்களைக் காப்பாற்றி யிருக்கிறார்! அந்த ஹம்மாமை நடத்தும் துரோகியின் கையிலிருந்து தாங்கள் தப்பியது ஆச்சரியந்தான்!”


'அவனைப்பற்றி என்ன?’’


‘அரசே! தாங்கள் மறுபடியும் அந்த ஹம்மாமுக்குள்ளே சென்றால், அதுவே தங்களுடைய முடிவு காலமாகும்!”


"ஏன்?"


"அந்த ஹம்மாமை நடத்தி வருபவன் தங்களுடைய பகைவன்; அவன் நம் இஸ்லாம் மார்க்கத்துக்கும் விரோதி! தங்களுக்கு விஷம் வைப்பதற்காகவே அவன் அதை நடத்தி வருகிறான். அடுத்த தடவை தாங்கள் ஹம்மாமுக்குச் சென்றால், அவன் வைத்திருக்கும் தைலத்தை எடுத்து வருவான். அதைத் தடவினால் உரோமங்கள் தாமாகவே உதிர்ந்துவிடும் என்று சொல்லுவான். அது வெறும் தைலமில்லை, கொடிய விஷம்! தங்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவதாக, அவன் வெளி நாட்டுக் கிறிஸ்தவ அரசன் ஒருவனுக்கு வாக்களித்துவிட்டு, இங்கே வந்திருக்கிறான். அவனுடைய மனைவியையும், மக்களையும் அந்த அரசன் பிடித்து வைத்திருக்கிறான். தங்களை அழித்தால்தான், அவ்வரசன் அவர்களை விடுதலை செய்வான். நானும் அவனோடு அந்த அரசனின் காவலில் இருந்தவன்தான். சாயம் காய்ச்சும் என் திறமையைக் கொண்டு, நான் அவனிடம் முன்னதாக விடுதலை பெற்றேன். அவன் எனக்குப் பின்னால், இந்தக் கொடிய நோக்கத்தை மேற்கொண்டு வந்து,ஹம்மாம் ஒன்றையும் நடத்தி வருகிறான். நான் இன்று அங்கு குளிக்கப் போயிருந்த சமயம், அவனே நேரில் என்னிடம் இந்தச் செய்திகளையெல்லாம் தெரிவித்தான், என்னைக் காத்துக் கைதுாக்கிவிட்ட வள்ளலாகிய தங்களுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற கவலையால் ஓடோடி வந்துள்ளேன்!”


“சரி, நீ இந்த விஷயத்தை இரகசியமாக வைத்துக்கொள்; வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம்!”