பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


 அவர் அருகில் வந்த பின்,அபு ஸிர் மீன் வயிற்றில் மோதிரம் இருந்த விவரத்தைக்கூறினான். அப்பொழுது கப்பித்தான் தாம் கோணியைக் கடலிலே போடுமுன், அரசர் கையிலிருந்து அம்மோதிரம் கடலில் விழுந்ததைத் தாம் கண்டதாகச் சொல்லிவிட்டு, அந்த ஆழியின் அற்புத ஆற்றல்களையும் அவனுக்கு விளக்கினார். "இனிமேல் கவலையில்லை. அரசராலும்கூட இனி உம்மை எதிர்த்து நிற்க முடியாது! இதை வைத்துக்கொண்டு நீர் எவரையும் வென்று அழிக்க முடியும்!” எள்று அவர் தெரிவித்தார்.
 அதைக் கேட்ட மருத்துவன், தன்னை நகரத்திலே கொண்டு சேர்க்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டான். அவரும், அப்படியே செல்லுவோம்! இனி நாம் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை!” என்று சொல்லி, ஒடத்தைத் தயாராகக் கொண்டுவந்தார். இருவரும் நகரை அடைந்தனர்.
  அபு ஸிர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு, அரண் மனைக்குச் சென்று, மன்னரைக் கண்டு வணங்கினான். அவனைப் பார்த்ததும், அரசர் வியப்படைந்து, 'கடலிலே ஆழ்த்தப்பட்ட நீ எவ்வாறு. தப்பி வந்தாய்?’ என்று வினவினார். அவன் நடந்த வரலாற்றைக் கூறினான் கள்ளம் கபடமற்ற தன் தன்மையை உணர்ந்து கப்பித்தான் தன்னைக் காப்பாற்றினார் என்றும், கடைசியாகத் தான் மீன் வயிற்றிலிருந்து மந்திர மோதிரத்தை எடுத்த விவரத்தையும் அவன் சொல்லி, இந்தக் கணையாழியைக் கொண்டுவந்து சமூகத்தில் சேர்ப்பதற்காகவே நான் வந்துள்ளேன், எடுத்துக் கொள்ளுங்கள்! நான் தங்களுக்கு விரோதமாக ஏதாவது செய்திருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி, எனக்கு மரண தண்டனை அளியுங்கள், நான் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்!” என்று கூறியவண்ணம், தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அரசரிடம் அளித்தான். அரசர் அந்த மோதிரத்தின் ஆற்றலெல்லாம் தெரிந்திருந்தும், அவன் அதை விசுவாசத்தேடு தம்மிடம் கொண்டுவந்து சேர்த்ததை எண்ணி, அவன் நிரபராதி என்பதைக் கண்டு அன்புடன் அதை வாங்கி, தம் விரலில் அணிந்துகொண்டார். அப்பொழுதுதான், பிரிந்த உயிர் மீண்டும் உடலுக்கு-