பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அவன் செய்த, வஞ்சனைகளுக்காக அவனுக்கு மிகக் கொடிய தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசர் தீர் மானித்தார். இவனை நகரம் முழுவதிலும், முக்கியமாகக் கடை விதிகளின் வழியாக இழுத்துச் சென்று, சுண்ணாம்புக் கல்லுள்ள ஒரு கோணியில் இவனை வைத்துக் கடலிலே எறிந்துவிடுங்கள்!” என்று அவர் தம் காவலர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது 
அபு ஸிர், 'நான் அவனை மன் னித்து, அவன் செய்த தீவினைகளையெல்லாம் மறந்துவிடுகிறேன் ! தயவுசெய்து அவனைத்தண்டிக்க வேண்டாம் !” என்று கேட்டுக்கொண்டான்.
 அரசர், 'நீ மன்னித்துவிடலாம், ஆனால், அரசுக்கு எதிராக அவன் செய்துள்ள குற்றங்களை நான் மன்னிக்க முடியாது !’ என்று கூறிவிட்டார்.  உடனே அபு கிர்ரைக் காவலர்கள் இழுத்துச் சென்று, கோணியில் சுண்ணாம்புக்கல்லுடன் அவனையும் சேர்த்துக் கட்டிக் கடலிலே எறிந்தார்கள். நயவஞ்சகனான அப்பாதகனுக்கு இவ்வாறு இரட்டை மரணம் எற்பட்டது ! நீரிலே மூழ்கியும், கண்ணாம்பின் வெம்மையிலே வெந்தும் அவன் மடிந்தான் !
அபு ஸிர் மேற்கொண்டு தான் அந்த நகரத்தில் இருக்க விரும்பவில்லை ! தன் தாயகம் திரும்ப வேண்டும் என்று அவன் மன்னரிடம் தெரிவித்துவிட்டான். அவர் அவனையே தம் முதல் விஜியராக*நியமிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறாததில் அவருக்கு வருத்தந்தான். ஆயினும், பரிசுத்தமான உள்ளம் படைத்த அபு ஸிர், தன் நாட்டுக்குத் திரும்பி, உற்றார் உறவினருடன் சுகமாக வாழ்ந்திருக்கட்டும் என்று அவரும் விரும்பினார். அவன் கேட்டதையெல்லாம் அளிக்க வேந்தர் தயாராயிருந்தார். ஆனால் அவனோ, தான் ஊருக்குச் செல்லும் அனுமதி ஒன்றையே வேண்டினான். வேந்தர் ஒரு கப்பல் நிறைய அரிய பொருள்கள் பலவற்றையும், பெருநிதிகளையும் ஏற்றிவைத்து, அவைகளோடு கப்பலையும், மாலுமிகளையும், வேலையாள்-

_____________________________

  • விஜியர் - மந்திரி.