பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களையும் அவனுக்குப் பரிசாக அளித்தார். அவன் மிகுந்த வருத்தத்துடன் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

ஒரு காலத்தில் வறுமையிலே வாடி வருந்திக்கொண்டிருந்த அபு ஸிர் இப்பொழுது சொந்தக் கப்பலில் சுகமாக யாத்திரை செய்துகொண்டிருந்தான்! அவன் வழியில் எந்தத் துறை முகத்திலும் இறங்காமல், கப்பலை நேரே அலெக்சாந்திரியாவுக்குச் செலுத்தும்படி சொல்லியிருந்தான். கப்பல் உலகப் புகழ்பெற்ற அந்தப் பெருநகரை அடைந்ததும், அவன் கீழே இறங்கினான். அப்பொழுது சில மாலுமிகள் கரையோரமாக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கோணி மூட்டையை எடுத்து வந்து அவிழ்த்துப் பார்த்தனர். அதனுள் இருந்தவை அபு கிர்ரின் அஸ்திகள் முதலிய அங்கங்கள் என்பதை அபு ஸிர் தெரிந்துகொண்டான். அவையும் கடலிலே மிதந்து மிதந்து கடைசியாக அலெக்சாந்திரியாவுக்கே வந்துவிட்டதைக் கண்டு, அவன் அவைகளை எடுத்து முறைப்படி கரையில் அடக்கம் செய்துவிட்டுத்தான் நகருக்குள்ளே சென்றான். அபு கிர்ரின் சமாதியைச் சுற்றியுள்ள கடலுக்கு அது முதல் அபு கிர் வளைகுடா என்றே பெயர் ஏற்பட்டது.