பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


வாய்க்கு வந்தபடி அவனை எசி, நீதித்தலத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்துவதாகப் பயமுறுத்திவிட்டுப் போவார். நீதித் தலத்தில் வழக்குத் தொடுத்தவர்களில்,அபு கிர்ரை வென்றவர்களே இல்லை. எந்த வகையிலும் அவனிடம் கொடுத்த துணி யானை வாயில் கொடுத்த கரும்புதான்- அது திரும்பி வந்ததே இல்லை ! இவ்வாறு நெடுங்காலமாக அவன் மக்களை ஏமாற்றுவதையே தொழிலாய்க்கொண்டிருந்ததால், நாளடைவில் அவனுடைய மோசடியைப்பற்றி ஊரெங்கும் தெரியலாயிற்று. வாடிக்கைக்காரர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி, நகரிலே 'அபு கிர் வேலை’ என்றால் என்ன என்பது எங்கும் பிரசித்தமாகிவிட்டது. நாளடைவில் அவனுடைய கடைக்கு ஆட்களே வருவதில்லை. அவனைப்பற்றிய விவரம் தெரியாத யாரேனும் ஒருவர் இடையிடையே அவனிடம் சிக்கிக்கொண்டு அல்லற்படுவதைத் தவிர, அவனுடைய தொழில் பாழாகப் போய்விட்டது. தொழிலை நடத்த முடியாத அபு கிர்,பெரும்பாலும் பக்கத்துக் கடையாகிய அபு ஸிர்ரின் முடி சிங்காரிக்கும் நிலையத்திற்கும் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கிருந்தபடியே தன் கடையின் வாயிலைப் பார்த்துக்கொண்டேயிருப்பான். முன்னால் துணி கொடுத்தவர் எவரேனும் தன் கடைப்பக்கம் வந்து நின்றால், அவன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டுவிடுவான்; வந்தவர் சாயக்காரனைக் காணவில்லையென்று திரும்பிப் போய் விடுவார். புதிதாக விவரம் தெரியாத எவரேனும் கையிலே துணியுடன் வந்து நின்றால், அவன் உடனே எழுந்து சென்று, "என்ன வேண்டும் என்று கேட்பான். வந்தவர் சாயம் தோய்க்க வேண்டும் என்றால், என்ன வர்ணம் என்று கேட்டுத் தெரிந்துகொள்வான். உடனே கூலியையும் முன்னதாக வாங்கிக் கொள்வான். ஆசாமி கடையைவிட்டுக் கிளம்பியதும், தானும் வெளியேறி, சந்தைக்குச் சென்று, அவன்.கொடுத்த துணியை விற்று, குடித்துவிடுவான். இவ்வாறு துணி கொடுத்தவர்களுக்கு, நடத்து நடந்து, பிணிதான் மிஞ்சும். ஆனால், அபு கிர் தொழில் தெரியாதவனும் அல்லன்:பல நிறச் சாயங்கள் காய்ச்ச-