பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 19

காய்ச்சலால் சோர்ந்து போயிருந்த கண்ணன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டே நமசிவாயத்தின் வீட்டை அடைந்தான். கண்ணனைக் கண்டவுடனே நமசிவாயம் அன்போடு வரவேற்றார். அவன் தந்தை இறந்த பிறகு, அவன் தன் வீட்டுக்கே வராமல் இருந்ததைக் குறிப்பிட்டுக் கோபித்துக் கொண்டார். அவன் உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, கண்ணா, காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடவில்லையா? உடம்பைக் கவனித்துக் கொள்ளவேண்டாமா?’ என்று பரிவோடு கேட்டார். அப்போதே துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, கண்ணனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார். மருத்துவருக்கு அவரே பணம் கொடுத்தார். பிறகு, கண்ணனை அவன் வீட்டிலே கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் மனைவி பார்வதியம்மாள், காய்ச்சிய கஞ்சியும் வெந்நீரும் கொண்டுவந்து கண்ணனுக்குக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

நமசிவாயத்தைப் பற்றிக் கண்ணன் எண்ணிப் பார்த்தான். அவர் எவ்வளவு நல்லவர் என்பது அப்போது தெளிவாகத் தெரிந்தது. அவன் அவரிடம் எப்படி இரண்டு ரூபாய் கடன் கேட்பதென்று கூசினான். ஆனால், அவரோ அவன் கேட்கும்வரை காத்திராமல், எவ்வளவு அன்போடு உதவி செய்தார். அப்பா இப்படிப்பட்ட நல்ல நண்பரைப் பெற்றிருந்தது தனக்கு எவ்வளவு உதவியாயிருக்கிறது! தனக்கும் நண்பர்கள் ஏழெட்டுப் பேர் இருக்