பக்கம்:நாடகங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

ஆறை நகரில் அடித்த மணல் மேட்டோடு அழுது நிற்பான் குலோத்துங்கன்!! அதுவே நேரம். நும்பாட்டன் அனங்கவர்மனுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க, கரிக்கொடி பறக்க கலிங்கத்திலே புரட்சி நடத்து.

வாரங்கல் அரசே! மேலைக்கங்கன் மகளுக்கு நீர் தந்த வாக்கை நிறைவேற்ற நாள் வந்து விட் டது. காவிரியில் வெள்ளப்புரட்சி. கலிங்கத்தில் விடுதலைப்புரட்சி நடக்கின்ற நேரம்- நுங்கள் படை ராஜமகேந்திரத்து இடைகழி நாட்டின் மேல் நடக்கட்டும் ...அந்த வீரச் செலவுக்கு நுளம்பனின் கீழைச்சீமை தும்கூர் கூற்றம் நும்மைச் சேரும். குவளலாபுரத்து அமராபரணரே சீய கங்கன் என்ற நும் பெயர் சிறக்க இது நேரம். பொன்னான வாய்ப்பு! சோழனின் நீர் வள நாடு நீருள் மூழ்கியிருக்கும்... நீவீர் காளத்தி பற்றி காஞ்சி மேல் வருக. இந்த நன்றிக்குக் கொப்பத்து பொன் குவியலுலுக்கு மேலை கங்கர்கள் உரிமை கோருவதில்லை என்ற உறுதி தருகிறேன்.

கல்யாணபுரத்து ஹொய்சள குமார விஷ்ணுவுக்கு நலம் வேண்டுகிறேன். உன் தங்கைக்குத் தங்கையான தலைகாட்டு நங்கைக்கு நீ செய்யும் ஓர்...( ) தலைக் காட்டில் செம்பியன் மழவராயன் செறுத்தி வந்த சேனையைச் சவக்காட்டிற்கு அனுப்பிக்கொடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/57&oldid=1396214" இலிருந்து மீள்விக்கப்பட்டது