பக்கம்:பச்சையம்மாள் கதை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தோம்புச்சேலை உடுத்திருந்தாள். அவள் பூண்டிருந்த ஆபாணம் கழுத்தில் முந்நூல் காதில் சாதாக்கம்மல் ஆக இம்மட்டுந்தான். வஸ்திரபூஷணாதிகளின் அலங்காரத்தைக்கண்டு எவரும் அவளைத் திரும்பிப்பார்க்கவில்லை. ஆனாலும் திரும்பிப்பார்த்த ஸ்திரீகள் சிலர் அவள் முகத்தில் விளங்கிய இனியகுணத்தையும் மட்டு மரியாதையையும் கண்டு கிட்டப்போனார்கள். அவள் குணம் குறிகோலங்களைக் கண்டவுடன் அவர்களுக்கு இயல்பாய் அவளிடத்தில் பிரீதி உண்டாயிற்று. நல்ல வயதில் அவள் அழகைக் காண்பவருக்கு ஆயிரம் கண் வேண்டும். காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவரும் அபூர்வசுந்தரி. பின்பு நாட்பட நாட்பட ஆபத்தின்மேல் ஆபத்து, துக்கத்தின் மேல் துக்கம், ஒரு துயர் ஒழிய மறு துயர் நேரிட்டதனால் அவள், முகக்களை குன்றி, மேனி கறுத்து, கடற்கரைக் கருமணல்போல அழகிய கூந்தல் வயது முதிருமுன் நரைத்துப்போ யிற்று. கூந்தல் நரைத்தும், இனிய குணத்தால் முகத்தில் விளங்கிய புன்னகையோ அன்றிருந்தவண்ணம் இன்றும் அழியாதிருந்தது. அன்றியும் சம்பவித்த ஆபத்து விபத்துகளை அவள் சகித்து, இவ்வுலகில் வாழ்வு தாழ்வு, இன்பதுன்பம் இவைகள் மனிதர் பங்கென்று எண்ணித் துக்கம் போக்கி, பதைப் பற்றிருக்க வழக்கப்பட்டதனால், முகத்தழகு குறையக் குறைய, அதற்கு முன் இல்லாத காந்தி உண்டாயிற்று.

பொய்ம்மையிலும் மெய்ம்மையே புதுமையென்று பலரும் சொல்ல எத்தனைமுறை காதாரக் கேட்டிருக்-