பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வீட்டிற்குள்ளேயே நடந்து கொண்டிருந்த விவாதம் முற்றி, இப்பொழுது வீதியிலே நடைபெறலாயிற்று. - இலவங்காய் பழுத்து முற்றி வெடித்தால், காற்று அடித்த பக்கமெல்லாம் போவதுபோல, இந்த சேதி ஊரெங்கும் பரவலாயிற்று. - தன்னுடைய கட்சிக்குப் பலம் தேட விரும்பினான் சிவசாமி. தனக்கு சாதகமாகப் பேசுவதற்காக, தன் சகோதரனைப் பற்றியும் அண்ணி முத்துலட்சுமியைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாகப் பேசினான். தாழ்ந்தால் சிரிக்கும் வாழ்ந்தால் வெறுக்கும் இந்த சமூகம், என்பது சிவசாமிக்குத் தெரியாமலே போயிற்று. என்றாலும், நிலைமை அவனுக்குச் சாதகமாகத்தான் மாறியது. ஊரிலே உள்ள வாழப் பொறுக்காத பலர் ஒன்று சேர்ந்து கொண்டு, சிவசாமியின் சார்பாக பேசத் தொடங்கினர். - தம்பிக்குரிய பாகத்தை சரிபங்காகப் பகிர்ந்து தந்து விடவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தம்புசாமி காலம் தாழ்த்துவதைப் . --.ெ f^ - * - -- - — -– –Ch – ^ –- ' - fÒ – – –" – " "