இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தீயவர்க் கன்பு செய்தால் - நம்மைத் தீமைகள் தேடிவரும் நாயினுக் கன்பு செய்தால் - அது நம்மைச் சுற்றிவரும்.
காட்டில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதனடியில் கோடரிக்காரன் ஒருவன் வந்து நின்றான். அவன் கோடரி காம்பில்லாமல் இருந்தது. காம்பு இல்லாவிட்டால் கோடரி பயன்படாதல்லவா? அவன் கோடரிக்குக் காம்பு செய்யச் சிறிய கிளையொன்றைக் கொடுத்து உதவுமாறு மரத்தைக் கேட்டான். மரமும் உள்ளமிரங்கிச் சிறிய கிளையொன்றை அவனுக்குக் கொடுத்தது. அவன் அக்கிளையைச் செதுக்கிக் காம்பு செய்தான். அக் காம்பைக் கோடரியின் துளையில் மாட்டினான். பிறகு அக்கோடரியால் அந்த மரத்தையே வெட்டிச் சாய்த்து விட்டான்.
- “தீயவர்க்குதவி செய்தால், நம்மைத்
- தீமை தேடிவரும்.”
36