இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தந்தை தாயைக் கும்பிடுவோம்
- தமிழைத் தாய்போல் வணங்கிடுவோம்
ஆசான் அடியைப் போற்றிடுவோம்
- அழகாய்ப் பாடம் கற்றிடுவோம்
பள்ளிக் கூடம் சென்றிடுவோம்
- பாட்டும் கதையும் படித்திடுவோம்
துள்ளித் துள்ளி ஆடிடுவோம்
- தோட்ட வேலை செய்திடுவோம்
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
- ஏட்டுக் கல்வி பொன்னாகும்.