பக்கம்:பாட்டும் கதையும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுரை

பள்ளி செல்லும் பிள்ளைகள் மகிழத்
தெள்ளு தமிழில் தேனடை தந்தேன்.
உள்ளம் இனிக்க உயிரும் இனிக்க
அள்ளி உண்க! ஆடுக! பாடுக!
பிஞ்சுப் பாப்பா, பின்னல் பாப்பா,
கொஞ்சும் சிறுவர், கூடிப் பாடச்
செஞ்சொற் பாட்டும், சிறுகதை விருந்தும்,
நீதிக் கதையும் நிறையக் கிடைக்கும்.
எல்லாச் சிறுவரும் இனிது படித்து
நல்லவராக நாளும் வளர்க!
சொல்லப்பர் என அனைவரும் போற்றும்
செல்லப்பர் எனும் சிலம்பிசைச் செல்வர்
மதிப்புரை தந்து மதிப்பளித் தார்கள்
அன்னவர் தமக்கும், கன்னற் சாற்றை
நூலாய்த் தந்து நாளும் படைக்கும்
வேலா பதிப்பகத் தார்க்கும் என்றன்
நன்றியும் வாழ்த்தும் உரித்தா குகவே!

சேலம்

அன்புக்
குழந்தையன்பன்

10-02-65