பக்கம்:பாட்டும் கதையும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைத்தான். அவள் அருகில் வந்ததும் அவளுடைய காதைப் பிடித்துக் கடித்து எடுத்து விட்டான். காதை இழந்த தாய் வீறிட்டுக் கதறினுள். இவனுடைய செயலைக் கண்டு எல்லாரும் இவனை அடிக்க வந்தனர். அப்போது பரமசிவம், ' நான் சிறுவயதில் திருடிக் கொண்டு வந்தபோது என்னை இவள் கண்டிக்கவில்லை. இக்காதால் என் திருட்டுச் செயலைப் பொறுமையோடு கேட்டுக் கொண் டிருந்தாள். அன்று என்னை இவள் தடுத்து அறிவு புகட்டியிருந்தால், நான் இன்று இந் நிலைக்கு வந்திருக்க மாட்டேன். என் குற்றத் தைப் பொறுமையோடு கேட்ட இக்காதைக் கடித்ததில் குற்றமென்ன இருக்கிறது ?” என்று கூறினன். ' குற்றத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.'