பக்கம்:பாட்டும் கதையும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லைத் துலக்கிவிடு கண்ணே - நீ பாய்ந்துநீர் ஆடிவிடு கண்ணே நல்ல உடையுடுத்து கண்ணே - கொஞ்சம் நாணமும் வேண்டுமடி கண்ணே கூந்தலைப் பின்னிவிடு கண்ணே - மலர்க் கொத்தொன்றைச் சூடிவிடு கண்ணே சாந்தினைக் கையிலெடு கண்ணே - பொட்டுச் சந்திரன் போல இடு கண்ணே பள்ளி திறந்ததடி கண்ணே - பெண்கள் பாதையில் செல்லுகிருர் கண்ணே புள்ளி மயில்அலவோ கண்ணே - நீ புத்தகம் தூக்கிவிடு கண்ணே 84