பக்கம்:பிள்ளைக்கலி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I : {} லாக அமர்ந்திருந்த பெண்களில் யாரோ ஒருத்தியிடமிருந்து என் பெயர் வளே ஒலிக்கிடையே அமுத ஒலியாய்க் கேட்ஒறது. பிள்ளைப் பருவத்துச் சிறுபிள்ளைபோல் மிழற்றுகிருள் ஒரு பெண், 'போடி, நீ என்னவோ கவிதை எழுதுவதாகப் பிரமாத மாகப் பீற்றிக் கொள்கிருயே! மலைகளையும் மேகங்களையும், பூக்களையும் பற்றிக் கமலக்கண்ணன் தம் வேனில் மலர்கள் என்ற கவிதைத் தொகுதியில் பாடியிருப்பதைப்போல் இனி யாருமே பாட முடியாது.” ஆர்வத்தோடு இவ்வாறு கூறிய இனிய குரலுக்கு உரியவளை நான் திரும்பிப் பார்க்கிறேன். முகம் தாமரையாய்க்-கண் கருவிளையாய் - வாய் செங்குமுதமாய் - நாசி எட்பூவாய்ப் பூக்காட்சியில் மற்ருெரு பூக்காட்சியென அந்த இளம் பெண் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிருள். இவ்வளவு அழகுகளுக்கு இருப்பிடமாய் ஒரு பெண் இருக்க முடியும் என்ற உண்மையையே இன்றுதான் முதன் முதலாகப் புரிந்துகொண்டவளுய் அவளைப் பார்க்கிறேன். பச்சைப் புல் தரையில் மஞ்சள் வாயில் புடவை அணிந்து சற்றே நளினமுறச் சாய்ந்து மண்டியிட்ட கோலத்தில் மண்ணில் விளையாட வந்த கந்தர்வப் பெண்போல் வீற்றிருக் கிருள். நல்ல உயரம், நல்ல சிவப்பு, அவள் சிரிக்கும்போது முகம் முழுவதும் மூக்கிலுள்ள வைர பேசரி, காதிலுள்ள வைரத் தோடுகள், எல்லாமே சேர்ந்து அழகாய்ச் சிரிப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது. இதழ்களின் சிரிப்பை வாங்கிப் பிரதி பலித்துக் காட்டுவதுபோல் அந்த மூக்குத்தி மினுக்கும் அழகே அழகு! 'கவி கமலக்கண்ணனுக்கு இத்தனை அழகான ஒரு ரசிகையா?” என் மனம் பொங்குகிறது; யூரிக்கிறது. இப்படி ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டால் என்ன? என் மனத்தில் கவிச் சொற்கள் கனிந்து துடிக்கின்றன. நான் ஐம்பத்திரண்டு வயசி லிருந்து இருபத்திரண்டு வயசு இளைஞளுகிவிடுகிறேன். கண்பூவாய்க் கைபூவாய்க் கமலச்செவ் வாய்பூவாய்ச் செம்பவழ இதழ்நடுவிற். சிரிக்கின்ற நகைபூவாய்ப் பெண்பூத்துப் பொலிகின்ருள் - பிறழ்மின்போல் நெளிகின்ருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/118&oldid=1395737" இலிருந்து மீள்விக்கப்பட்டது