பக்கம்:பிள்ளைக்கலி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


என்று அங்கேயே அரைகுறையாகத்-தப்போ, சரியோதோன்றிய வரிகளைக் குறித்துக் கொள்கிறேன். தத்துவ ஞானியும், அப்பழுக்குச் சொல்ல முடியாத துறவியுமான கவி கமலக்கண்ண னுடைய மனம் ஒரு பெண்ணின் அழகில் நெகிழ்கிறது. அந்த அழகை வருணித்துப் பித்தன்போல் கவியும் பாடுகிறது. வேடிக்கைதான்! உதகமண்டலம், மே மாதம், 16ஆம் தேதி, இரவு : இது என்ன ஆச்சர்யம்! நேற்று பொடானிகல் கார்டனில்’ பார்த்த பெண் எங்கே இருக்கிருளோ, யாரோ என்று நான் தவித்த தவிப்பைத் தீர்ப்பவள்போல் எதிர்த்த அறையிலிருந்து வெளிவருகிருளே! நான் தங்கியிருக்கும் இதே விடுதியில் எதிர் அறையில்தான அந்தப் பெண்கள் கூட்டமும் தங்கியிருக்கிறது ? ஏதோ கல்லூரி மாணவிகள் சேர்ந்து உல்லாசப் பயணம் வந்திருக் கிரு.ர்கள் போலிருக்கிறது. எதிர் அறையில் அவளுடைய குரல் ஒலிக்கும் போதெல்லாம் கவி கமலக்கண்ணனுடைய பெருமையைப் பேசுவதாகவே ஒலிக் கிறது. கமலக்கண்ணனுக்கு எத்தனை அழகான ரசிகை: என் மனம் மலேயத்தனே உற்சாக உயரத்தில் ஏறி நிற்கிறது. நேற்றும் இன்றும் உதகமண்டலம் மிக அழகாக மாறிவிட்டது. இங்கே இந்த இயற்கையழகுக்கு நடுவில் கவி கமலக்கண்ணளுகிய என்னைப் பற்றியும் நினைப்பவர்கள் இருக்கிருர்கள், நர்ன் சொற் களின் தரகன் அல்ல: கவிகளின் நாயகன். இதோ இந்த இரவின் அமைதியில் எதிர்த்த அறையில் அந்தப் பெண் தன் தோழிகளுக்கு என் வேனில் மலர்களை இசை வெள்ளமாய்ப் பாடிக் காட்டிக்கொண்டிருக்கிருள். நான் எத்தனை பாக்கியசாலி! மாதுளை மொட்டுப் போன்ற அவள் உதடுகளில் எழும் இசையின் சொற்கள் என்னுடையவை அல்லவா ? அந்தச் சொற்களை அப்படிக் கவிதையாய் இணைத்தவன் நான் அல்லவா ? இப்படி ஒரு பெண்ண்ை மணந்து கொண்டு அவள் பாடிக் காட்ட வேண்டு மென்ற ஒரே நோக்கத்துக்காகவே லட்சோபலட்சம் கவிதைகளை நான் எழுதலாமே! உம் இந்த வயசுக்கு மேல் அது சாத்திய மாகுமா ? உதகமண்டலம், மே மாதம், 17ஆம் தேதி, இரவு: நான் மகா யோகக்காரளுகிவிட்டேன். இன்று அந்தப் பெண் தயங்கித் தயங்கி என் அறைக்குள் நுழைந்து கமலப் பூங் கரங்களைக் கூப்பி வணங்கிளுள். பேசினுள் : 'முதலில் நேற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/119&oldid=1395738" இலிருந்து மீள்விக்கப்பட்டது