பக்கம்:பிள்ளைக்கலி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 உங்களைப் பார்த்தபோதே நீங்கள்தாம் கவி கமலக்கண்ணளுக இருக்க வேண்டுமென்று சந்தேகமுற்றேன். இன்று விடுதி மானே ஜரிடம் விசாரித்தபோது என் சந்தேகம் தீர்ந்தது. எனக்கு உங்கள் கவிதை மிகவும் பிடிக்கும்.’’ 'உட்கார் அம்மா. நீ நேற்றிரவு என் வேனில் மலர்களை தன்முகப் பாடிய்ை. நானும் கேட்டேன்.' நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போளுள் அந்தப் பெண். என் மனத்தில் உல்லாசத்தை நிரப்பி விட்டுப் போனுள் என்பதுதான் பொருத்தமான வாக்கியம். நாளைக்காவது அன்று மலர்க் காட்சியில் கிறுக்கின. அவளைப் பற்றிய கவிதையை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும். தத்துவம், தெய்வீகம், இயற்கை இவற்றை நீக்கிப் பெண்ணழகைப் பற்றிக் கமலக்கண்ணன் பாடும் முதற் கவிதை இதுவாகத்தான் இருக்கும். உதகமண்டலம், மே மாதம். 18ஆம் தேதி, இரவு : இன்று பேசிக் கொண்டிருக்கும்போது அந்தப் பெண் ஒரு கேள்வி கேட்டாள் : 'கவிதைகளே எழுதும் அனுபவங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன ?” நான் வழக்கமாக எல்லோருக்கும் கூறுகிற பதிலேச் சொன் னேன். அவள் குறும்புச் சிரிப்பும், குறும்புப் பார்வையுமாக என்னை நோக்கி, 'என்னைப் பற்றி ஒரு பாட்டு எழுதிக் கொடுங் களேன், பார்க்கலாம்' என்று வெள்ளைத்தனமாகக் கேட்டு விட்டாள். 'உன்னேப் பற்றி நேற்றே பாடியிருக்கிறேன்' என்று பதி லுக்கு நான் சொன்னதும் அவளுக்கு வியப்பாகி விட்டது. அவளேப் பற்றி நான் பாடிய சில வரிகளைச் சொல்லி அந்த வியப்பைப் பின்னும் அதிகமாக்கினேன். அப்போது அவள் முகம் இணையிலா நாண அழகு சுரந்து நகைத்தது. என் மனம் பூரித்தது. உதகமண்டலம், மே மாதம், 19ஆம் தேதி. இரவு: இன்று கால அந்தப் பெண்கள் குழு ஊருக்குப் புறப்பட்டு விட்டது. புறப்படுமுன் அவள் என் அறைக்கு வந்தாள். அவளுடைய கைகளில் என் வேனில் மலர்கள்’ என்ற கவிதைப் புத்தகம் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/120&oldid=1395739" இலிருந்து மீள்விக்கப்பட்டது