பக்கம்:பிள்ளைக்கலி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35 'ஆகா! கட்டாயமாக. அதிருக்கட்டும். இந்தப் பெண் உனக்கு நெருங்கிய உறவு என்ருயே; என்ன உறவு ?’’ சந்துரு அவருடைய இந்தக் கேள்விக்குப் பதில் கூருமல் அவர் முகத்தையே பார்த்தார். 'என்ன அப்படிப் பார்க்கிருய் சந்துரு? உறவைச் சொல்வது சாத்தியமில்லையாளுல் வேண்டாம்.' 'சொல்வது சாத்தியந்தான், சார்.’’ பின் ஏன் தயங்குகிருய் ?" 'இவள் என்னுடைய மனைவி!’ கவிஞரின் முகம் பேயறை வாங்கியதுபோல் வெளிறுகிறது. அவர் கையில் இருந்த வேனில் மலர்கள் நழுவிக் கீழே விழுகிறது. உடம்பே கூசிக் கூனிக்குறுகி அணுவாய்த் தேய்ந்து விட்டதுபோல் சிறுத்துக் குன்றிவிடுகிறது. நிமிர்ந்து சந்துருவைப் பார்க்கிரு.ர். ஒரு புகழும் இல்லாத அந்தச் சாதாரண உதவியாசிரியர் நிஷ களங்கமாகச் சிரிக்கிருர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/123&oldid=1395742" இலிருந்து மீள்விக்கப்பட்டது