பக்கம்:பிள்ளைக்கலி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 0 'நடந்துகொண்டே பேசலாம்’ என்றேன். மாளுல் நாளே நாம் மீண்டும் இங்கு வரலாம்’ என்ருள். என் உள்ளத்திலிருந்த இசையை அவள் சொற்களால் மீட்டவும், நான் ஒப்புக் கொண்டதுபோல் பாவனை செய்தேன். சாலை ஓரத்தில் நடந்த பேச்சு அதிகமில்லை. ஊரருகே வந்ததும் நான் பின் தங்கிக் கொண்டேன். அவள் முன்னேறிள்ை. இதோ இன்று என்னைச் சந்திக்க ஓடிவருகிருள்!...உள்ளத் தில் ஒரு புதிய மலர்ச்சி பரவியிருந்தது. திருமணம் நின்றதும், ஊரில் ஏதேதோ பேசியதுமான கடந்த காலத் தோற்றங்கள் பொய்யாகப் புலப்பட்டன. மீண்டும் மீண்டும் நினைவில் கிளர்ந்த பொருள் நிறைந்த பார்வையின் கம்பீரமே நிலைத்தது. இன்பச் செறிவில் மிதக்கும் கண்கள், கூனியும், நிமிர்ந்தும் துவளும் இடையின் பொன் சிவப்பு நிறம், குமிண் சிரிப்பிலும் குழிவிழும் கதுப்புக் கன்னங்கள், சிறிது நீண்டு மலர்க் கொத்துப்போல் தோன்றும் முகவாய், இடைவெளி விட்டுக் கோத்த முத்தென்னும் பற்கள்... இவை தந்த நினைவுச் சுவைகள்தாம் எஞ்சி நின்றன. எந்த அவமதிப்பைத் தாளாது துடித்தேனே, அதிலே இதயமும் இன்பமும் கலக்கக் கண்டேன். மாலையின் சோபிதம் புது விதத்தில் மனதில் தெறிக்க, மலையடிவாரம் உதவியது. இதோ விஜயா அருகில் வந்துவிட்டாள். என்னைக் கண்டு அவள் அழகாகச் சிரிக்கிருளே, அதற்கு என்மீது அன்பில்லை என்ரு பொருள்? அந்தப் புன்னகை வற்ருத ஜீவநதி போலல்லவா அதரங்களில் பெருக்கெடுக்கிறது. என் முன் அவள் இங்குற்றதின் மர்மம், பின் வேருக இருக்க முடியுமா? பேதைப் பெண் கதைகளில் வருவதுபோல் காதலிக்காமல் திருமணம் புரிந்து கொள்ளலாகாது என்று திருமணத்திற்கு மறுத்திருப்பாள்! ஆளுல், என்னுடன் பழகி, காதலாகிக் கண்ணிர் மல்கிக் கசிந் துருகத் துடிக்கிருள்! "உட்கார், விஜயா!' அவள் ஒயிலாக அமர்ந்தாள். அவள் உடுத்தியிருந்த வெண்ணிறப் புடவை, வானில் இவர்ந்த தேவதையின் தெளிவைக் காட்டியது. 'என்ன அப்படிப் பார்க்கிறீர்கள். என் மனேநிலையைப் படமெடுக்கிறீர்களா ?:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/128&oldid=1395747" இலிருந்து மீள்விக்கப்பட்டது