பக்கம்:பிள்ளைக்கலி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வாழவைத்தவன் சோம. மகாதேவன் தகரக் கொட்டகையின் கீழ், காரைத் திண்டின்மீது ஒருக்களித்துச் சாய்ந்து படுத்திருந்தான் கிழவன் சுடலைமாடன். முதுமை யடைந்துவிட்ட போதிலும், பகல் பொழுதில் அவன் இப்படிப் படுத்ததேயில்லை. கோட்டான்களும் நரிகளும் ஓலமிடும் பொழுதில்கூட, தனித்து நின்று, எத்தனை எத்தனையோ பிணங்களைச் சாம்பலாக்கியவன் அவன். எரியூட்டும் முன்பாக, பிரிந்து சென்றவர்களை நினைத்து அழுது புலம்பும் சோகத்தைப் பார்த்து இறுகிப்போன நெஞ்சு அவனுக்கு. இந்த இடுகாட்டுக்கு உரிமைக் காவலாளி அவன். இரண்டு நாட்களாகவே, சுடலைமாடன் இப்படித்தான் சோர்ந்து படுத்துவிடுகிருன். எதையோ நினைத்து, இடையிடையே அழுவதாகவும்படுகிறது. தன் மகளைப் பார்க்கச் சென்று, அங்கே சில தினங்கள் தங்கிவிட்டு வந்த பிறகுதான் சுடலைமாடன் போக்கிலே மாறுதலைக் கண்டார்கள், அவனை அறிந்தவர்கள். ஒரு சமயம் அவனே, "செல்லம்மாளுக்குக் கல்யாணம் நடந்துவிட்டது' என்பான். சிறிது நேரம் கழித்து, 'கல்யாணம்ன்னு அப்படியெதுவும் நடக் கலையே!' என்று சொல்லிவிட்டுத் தனியாகப்போய் உட்கார்ந்து கொள்வான். 'நடந்ததையாவது சொல்லேன்' என்று உற்ற வர்கள் கேட்கும்போது, அவனிடமிருந்து பதிலே வராது. உறவு' என்று சொல்லிக் கொள்வதற்கும், அவன் மகள் செல்லம்மாளைத் தவிர வேறு ஒருவருமே இல்லை. கடந்த பத்து வருடங்களாகவே, கூலிக்கு வேலை செய்யும் பெரிய கருப்பன்தான் கிழவனுக்குத் துணை. "இளவட்டம் மாதிரி ஒடியாடித் திரிந்த கிழவனுக்கு, திடீரென்று என்ன வந்துவிட்டது? என்பது புரியாமல் திகைத் தான் பெரிய கருப்பன். என்றைக்குமே- எதையும், யாரிடமும் மனம் விட்டுச் சொல்லாத, இறுகிப் போன கட்டை. இதுவரையி லும், கூடவே வேலை செய்யும் பெரிய கருப்பனிடம்கூட, எங்கோ வளர்ந்து வரும் மகளைப் பற்றி எந்த விபரமும் சொன் னதே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/139&oldid=1395758" இலிருந்து மீள்விக்கப்பட்டது