பக்கம்:பிள்ளைக்கலி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3 உலர்ந்து சருகாகிப் ர்மாலைகள், உடைந்து சிதறிய மண் கலயங்கள் - எரியும் சிதை, இவைகளுக்கு மத்தி யிலே அவனும் அவளும் நேரம் போவது தெரியாமலே பேசிக் கொண்டிருப்பார்கள். அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் பிறவியெடுத்து, ஒன்று கூடியிருப்பதாக ஒரு களிப்பு அவர்களுக்குள்ளே நிறைந்திருக்கும். மறுவருடம் மாரியம்மாள் ஒர் பெண் மகவைப் பெற் றெடுத்தாள். உலகத்தையே மறந்த நிலையில் மேலும் பல வருடங்கள் உருண்டன. சுடலைமாடனின் வாழ்வில் முதல் திருப்பம் ஏற்பட்டது. பூத்துக் குலுங்கும் மலர்க்கொடியை வெட்டி வீழ்த்தியது போல, மாரியம்மாள் நோயுற்ருள். அவள் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவளது தலையை மடியில் தாங்கியவாறு அழுது புலம்பினுன் சுடலைமாடன். 'மாரி... என்னைத் தனியே விட்டுட்டுப் போறியா ?" என்று சொல்லி முட்டிக்கொண்டான். 'அழாதிங்க... செல்லி இருக்கா.. அவளைக் கண்கலங்காமக் காப்பாத்துங்க’’ என்று சொல்லிக் குளிர்ந்துவிட்டாள் மாரியம் மாள். அவளைச் சாம்பலாக்கிய இடத்திலேயே பித்தனப்போல உட்கார்ந்துவிட்டான் சுடலைமாடன். தொழில் முறையிலே அவனுக்கு நல்ல வருமானம் இருந்தது. அவனுக்கு மறுமணம் செய்துவைக்க உறவுமுறையார்கள் சூழ்ந்து வந்தார்கள். சுடலைமாடன் மட்டும் பட்டும் படாமலும் தட்டிக் கழித்துவந்தான். இசைந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் - மற்றவர்களுக்கு இருந்தது. நாலு நாளில் திருமணம் நிச்சயம் செய்யப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். அன்றிரவு பூராவும் சுடலைமாடன் கண்ணுறங்கவேயில்லை. அந்த வீட்டிலே, அதுதான் அவனுக்கு கடைசி இரவு. வெகு நேரம் வரையிலும் மாரியம்மாளை நினைத்து அழுது கொண்டே இருந்தான். அவளது அன்புக்கும் ஆதரவுக்கும் வேருெரு பெண் இணையாக முடியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/141&oldid=1395760" இலிருந்து மீள்விக்கப்பட்டது