பக்கம்:பிள்ளைக்கலி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互55 அந்த உடல் வேறு - என் உடல் வேறு! அந்த உடலின் உணர்ச்சிகள் வேறு - என் உடலின் உணர்ச்சிகள் வேறு! இதோ, நாம் நெருப்புக் கொப்புளங்களின் வேதனை தாளாது துடிக்கும் போது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாமல், அவர்களும் அதை உணராமல் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கிருர்கள். நாம் கூப்பிட்டுக் காட்டினல் ஆ......ஊ' என்று சத்தம் போடுவார்கள். "ஐயோ...... மகனே' என்று அலறுவார்கள். ஆனல் நான் அவர் களிடம் காட்டாமல் இருக்கும்வரை அவர்கள் ஒன்றையும் உணர மாட்டார்கள். இதிலிருந்து பார்த்தால் ஒரு உடலுக்கும் இன் ைெரு உடலுக்கும் தொடர்பு இல்லை யென்று தெரிகிறது. தங்கைக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது. காய்ச்சலால் அவள் இறந்து போனல்தான் போகட்டுமே! இயற்கையாகத் தொடர்பு இருந்தால் அவள் உயிர் போகும் அதே நேரத்தில், நம் உயிரும் போக வேண்டும். அல்லது நாம் வேதனை அநுபவிக்கும் போது அவளுக்கும் வேதனை தெரிய வேண்டும். இது வரை அப்படி ஒன்றும் நடப்பதாகக் காணுேம். அவள் ஒரு உயிர். நாம் ஒரு உயிர்! அவ்வளவுதான். அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்த உயிர் நம் தாய் வயிற்றில் பிறந்ததால்தான் நாம் தங்கை’ என்கிருேம். வேறு எங்கே யாவது நூறு மைல் தூரம் தள்ளிச் சென்று பிறந்திருந்தால் நாம் அங்கு தேடிச் சென்ரு நம் தங்கை’ என்று சொல்லி யிருப்போம் ? தங்கை வேறு உயிர் - வேறு உடல்! புரிந்தும் புரிபடாமல், புரிபட்டும் புரியாமல் உண்டான சிந்தனைகளால் - என் அறிவு, வயது, அநுபவம் எல்லாவற்றையும் கடந்த குழப்பமான சிந்தனைகளால்-நான் அன்றிரவு முழுவதும் தூங்கா மல் இருந்தேன். என் சிறிய வயதில் அந்தச் சந்தர்ப்பத்தில் உண்டான உள் அநுபவம்தான், சமீபத்தில் நான் உயிரியல் தத்துவங்களை விளக்கி நூல்கள் எழுதுவதற்குக் கருவாக அமைந் தது. ’’ பரிமேலழகர் தமது இளவயது அநுபவத்தைக் கூறி முடித்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் கனவு உலகத்திலிருந்து விடுபட்டதைப்போல மயக்கம் தெளிந்தார்கள். அதிகமாகத் தெரிந்த ஒரு இடத்திலிருந்து ஒன்றுமே முன்பின் தெரியாத ஒரு உலகத்திற்குச் சென்று திரும்பியதைப் போன்ற புதுமையான அநுபவம் அவர்களுக்கு உண்டாயிற்று. தமது பதினேராவது வயதிலேயே இத்தகைய சீரிய சிந்தனைகளும் கற்பனைகளும் உண்டானதால்தான் அவர் பிற்காலத்தில் ஒரு தத்துவ ஞானியாக விளங்க முடிந்தது என்று அவர்கள் எண்ணி ஞர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/153&oldid=1395772" இலிருந்து மீள்விக்கப்பட்டது