பக்கம்:பிள்ளைக்கலி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 § 'அப்பா' என்று அழைத்துக் கொண்டே, அழகே உருவாய் அமைந்த ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி ஓடி வந்தாள். தன் தந்தையுடன் யாரோ வேற்றுமனிதர்கள்அமர்த்திருப்பதைக் கண்ட அவள் கண்களில் ஒரு கணநேரம் மானின் மிரட்சி தோன்றியது. ஆளுல், உடனே அவள் கம்பீரத்துடன் நிமிர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டே, தந்தையின் அருகில் சென்று அவர் காதில் தன் கையை மறைத்து வைத்து ஏதோ இரகசியம் கூறுவதைப் போலச் சொன்னுள். நண்பர்கள் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரிமேலழகர், தம் மகளை அன்புடன் இழுத்துத் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டு, 'ஒன்றுமில்லை. உணவு நேரம் ஆகிவிடவே, உங்களை இங்கேயே சாப்பிடுவதற்குக் கேட்டுக் கொள்ளச் சொல்லி என் மனைவி சொல்லியனுப்பியுள்ளார்கள்’’ என்ருர் சிரித்துக்கொண்டே. 'குழந்தை......' கலைப்பித்தன் இழுத்தார். 'எங்கள் குழந்தைதான். ஒரே பெண். வயது ஐந்து ஆகிறது. பெயர் கண்ணகி, வீட்டிலேயே இரண்டாவது வகுப்புப் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிருள். எங்களுக்குச் காலம் கடந்து பிறந்தவள்’’ என்ருர் பரிமேலழகர். கண்ணகி சற்று நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு தன் தந்தையிடம், 'என்னப்பா ! என்னைப் பற்றி மட்டும் அவங்க ளிடம் சொன்னிங்க. அவங்க யாருன்னு எனக்குச் சொல்லலேயே’ என்ருள். 'ஒகோ! மறந்து விட்டேன். அவர்கள் நக்கீரர் கழகம்’னு ஒரு சங்கம் இருக்கு. அதைச் சேர்ந்தவங்க. என்னைப் பார்த்து விட்டுப் போக வந்திருக்காங்க!' கண்ணகி, சட்டென்று எழுந்து நின்று தன்னுடைய மலர்க் கரங்களைக் குவித்து 'எல்லாருக்கும் வணக்கங்க’’ என்ருள், குமுத இதழ் திறந்து. பாவாடை, சட்டை அணிந்த ஐந்து வயதுச் சிறுமி அவள் என்பதை மறந்த நண்பர்கள், கோயிலில் உள்ள சுவாமிக்கு வணக்கம் செய்வதைப்போல அடக்க ஒடுக்கத்துடன் கைகூப்பி ஞர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/154&oldid=1395773" இலிருந்து மீள்விக்கப்பட்டது