பக்கம்:பிள்ளைக்கலி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 6 2 "எங்கே உதிக்குதுன்னு கேக்கலை. அது ஏன் உதிக்குதுன்னு கேட்கிறேன்' - கேள்விக் கணையைக் கூர்மையாக்கிஞர்கள் அஞ்சுகம். 'ஒ...... அதுவா ? வந்து...... வந்து......!கண்ணகிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அதன் பிஞ்சு மூளை குழம்பியது. 'சொல்லு கண்ணகி: பகல் எப்படி வந்தது!’ அஞ்சுகம் மீண்டும் கேட்டார்கள், என்ன சொல்வது என்பது புரியாமல் கண்ணகி திக்குமுக்காடித் திணறிள்ை. 'போம்மா... எனக்குத் தூக்கம் வர்றது. நான் துரங்கப் போகிறேன்' என்று தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் சாக்குச் சொல்லிவிட்டு, எழுந்தோடிச் சென்று த கட்டிலில் படுத்துக்கொண்டு போர்வையால் உடலையும் முகதையும் மூடிக்கொண்டாள் கண்ணகி. குழந்தையை அடக்கி விட்டோம் என்ற எக்களிப்பில் சிரித்துக்கொண்டே அஞ்சுகம் படுத்தார்கள். அந்தச் சிரிப்பு, பரிமேலழகரைக் கேலி செய்வதுபோல் இருந்தது. 'குழந்தைக்குப் பதில் சொல்லத் தெரியாமல் நாம் திணறி ளுேம். ஆனல் படிக்கத் தெரியாதவளாக இருந்தும் ஒரு சிறிய எதிர்க்கேள்வி போட்டு அஞ்சுகம் எவ்வளவு சாமர்த்தியமாகக் குழந்தையை அடக்கி விட்டாள். குழந்தையின் ஆர்வ எழுச்சியை அவள் நல்ல முறையில் பூர்த்தி செய்யாதது தவறுதான். ஆனால், அதுகூடச் செய்யத் தெரியாமல் குழந்தைக்கு விளக்கவும் முடி யாமல் அதன் கேள்விகளே அடக்கவும் தெரியாமல் நாம் திகைத்துக் கொண்டிருந்தோமே..... கண்ணகி சொன்னதைப்போல நாம் நாளைக்குப் பட்டம் பெறத் தகுதியுடையவராக இல்லையா ?” பரிமேலழகர் இரவு முழுவதும் தூங்காமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார். 泰 岑 本 பொழுது விடிந்தது. விழாக் குழுவினர் வந்து அன்புடன் பரிமேலழகரையும் அஞ்சுகத்தையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றனர். - - மூவரையும் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அமர வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/160&oldid=1395779" இலிருந்து மீள்விக்கப்பட்டது