பக்கம்:புகழ்மாலை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

புகழ் மாலை


கடவுளர்கள்.பூசுரர்கள்.ஆதாம்,ஏவாள்,
    கலிகால தெய்வங்கள்; அறிவு தன்னைக்
குடை சாய்க்கும் மதமனிதர், எவரும் இந்தக்
    குவலயத்தில் இதுவரையில் செய்திடாத,
வெடிவானத் திடிப்புரட்சி செய்து, ஏழ்மை
    வேதனையைப் போக்கியவன் இந்த குள்ளன்!
தடையாவும் தூள்! தூள்!! தூள்!!! சாரின் ஆட்சி
    தவிடுபொடி;இவனாலே,ருசிய நாட்டில்!


இருட்டாக இருந்திட்ட ருசிய நாட்டுக்
    கிவன் ஒருவன் இல்லாது போயியிருந்தால்;
திருட்டுக்கள்;தீச்செயல்கள்;பசியினாலே;
    தினந்தோறும் இறப்பவரின் கணக்கு; செல்வம்
பெருக்கிவரும் பணக்காரன், ஏழை, என்னும்
    பேதங்கள் இருந்தபடி இருந்திருக்கும்!
எரிக்கின்ற நெருப்பாக இருந்து வந்த
    இவன்தான் காண் லெனின் என்னும் புரட்சி வீரன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/52&oldid=1491452" இலிருந்து மீள்விக்கப்பட்டது