பக்கம்:புகழ்மாலை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

புகழ் மாலை


மாண்புடைய மூவேந்தர் சிறப்பு மிக்க
    வரலாற்றை உரைக்காமல், வடக்கு நாட்டுப்
பாண்டவரின் பெருமைதனைப் பற்றிப் பேசும்
    பண்டிதர்கள் என்பவர்கள், இந்த நாட்டின்
தூண்மனிதர்; சுணையற்ற தமிழர்-என்று
    சொல்லுதற்கு அஞ்சாத புலவர் இங்கு,
ஆண்டவனைக் கருங்கல்லில் பாரீர் என்னும்
    ஆரியத்தின் சூழ்ச்சிதனை வீழ்த்தும் ஆசான்!

விழிக்காக, எழில்காத்துக் கொண்டி ருக்கும்;
    விதைக்காக, வயல்காத்துக் கெண்டி ருக்கும்;
இழைக்காகத், தறிகாத்துக் கொண்டி ருக்கும்;
    இசைக்காக, செவிகாத்துக் கெண்டி ருக்கும்;
மழைக்காகப், பயிர்காத்துக் கொண்டி ருக்கும்;”
    வாடாத சான்றோரின் வழியில் வந்த
பிழையில்லாப் பேரறிஞர் இவர்சொல் கேட்கப்
    பெரும்புலவர் தினந்தோறும் காத்தி ருப்பர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/58&oldid=1491268" இலிருந்து மீள்விக்கப்பட்டது