பக்கம்:புகழ்மாலை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

புகழ் மாலை


உரைநடையில் எழுதியுள நூற்கள் போக
      உயர்தமிழ்க்குத் தளராது தொண்டு செய்து,
அருஞ்சொற்கள் தனைவைத்தா ராயி ரத்து
     அறுநூற்று அறுபத்து ஆறு செய்யுள்,
நரைக்கிழவர் பாடியுளார்; கடுமையான
     நடைதனிலே அச்செய்யுள் அமைந்த போதும்
சரியான சிந்தனைகள்; உவமை, வண்ணம்;
     சந்தநயம் அத்தனையும் அவற்றில் உண்டு.

எண்ணங்கள் தருபவனே சிறந்தோன்; கோழை
     எனப்படுவோன் நூறுமுறை இறந்தோன் வாழ்வில்
கண்எனக்கு எதுவென்றால், தமிழ்தான்! நல்ல
     கவிதைகளே என்மூச்சு, என்று ரைத்து,
மண்ணுக்குள் தூங்குகின்ற பொன்னைப் போல,
    வழக்கினிலே வாராமல் இருந்து வந்த
எண்ணற்ற தமிழ்ச் சொல்லைத் தனது நூலில்
   எடுத்தெடுத்துக் கையாண்ட தாடிக் காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/60&oldid=1489330" இலிருந்து மீள்விக்கப்பட்டது