பக்கம்:புகழ்மாலை.pdf/65

இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா 63

பேரறிஞர் அண்ணா

சரியான வழியைக் காட்டும்

தலைவனே, சமுதாயத்தின் மரியாதைக் குரியோ னாவான்.

மக்களின் தலைவனாவான். பெரியாரால் மதிக்கப் பெற்ற

பேரறிவாளர் அண்ணா விரிவான கீர்த்தி பெற்று

விளங்கிய தலைவராவார்.

தங்கத்தால் ஆன தட்டில்

சாப்பிடும் தலைவருண்டு. தங்களுக்காகப் பட்டுச்

சட்டைகள் தைப்பாருண்டு. மங்கிப்போய் இருந்தோர்க் கெல்லாம்

மறுவாழ்வு தந்த மேதை, இங்குளோர் வியக்கும் வண்ணம்

எளிமையாய் வாழ்ந்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/65&oldid=664349" இருந்து மீள்விக்கப்பட்டது