பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

புறநானூற்றுச் சிறு கதைகள்


திலகமில்லாத அவள் முகம் அங்கிருந்தோரின் துயரத்தை வளர்த்தது. “கற்பரசியாகிய இந்த அம்மையாருக்கு இத்தகைய துன்பத்தைச் செய்யக் கடவுள் எவ்வாறு துணிந்தார்? கடவுளுக்கு இரக்கமே இல்லையா?” என்று விதியையும் கடவுளையும், பலவிதமாக நொந்து கொண்டிருந்தனர் அங்கிருந்தோர்.

சிவிகையிலிருந்து சோகச் சித்திரம் ஒன்று எழுந்து வெளிவருவது போல வெளிவந்த பெருங்கோப்பெண்டு எரிகின்ற ஈமச்சிதையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந் தாள். கயல் மீனின் உருவ அமைப்பும் கருவண்டின் சுழற்சியும் செந்தாமரை மலரின் நிறமும் கொண்ட அவள் விழிகள் மாலை மாலையாகக் கண்ணிர் வடித்தன. அவளுடைய உள்ளத்து ஆசைகளும், அந்த ஆசைகளால் மலர்ந்த கனவுகளும் அந்தக் கனவுகளால் விளைந்த இன்பமும் - அவ்வளவேன் - அவள் சம்பந்தமான சர்வமும் அந்தச் சிதையில் தியோடு தீயாக எரிந்து தீய்ந்து கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. பித்துப் பிடித்தவளைப்போல அப்படியே சிதையைப் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள். என்ன நடக்கக் போகிறதோ, என்ற திகைப்பும், பயமும்கொண்டு கூட்டத்தினரும் நின்றனர்.

மெய்க்காவலர்கட்கும் புலவர் பெருமக்களுக்கும் பெருங்கோப்பெண்டு அங்கே வந்ததன் நோக்கமென்ன என்று கேட்பதற்கு வாயெழவில்லை. அஞ்சி நின்றனர். “தேவி என்ன நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறாளோ?” என்ற அச்சம் அவர்கள் மனத்திலும் இருந்தது.

சிதையில் தீ இப்போது முற்றும் பரவி நன்றாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சிதையையே பார்த்துக் கொண்டிருந்த பெருங்கோப் பெண்டு கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.இப்போது அவள் முகத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு வைராக்கியமான முடிவிற்கு வந்தவளைப் போலத் தோன்றியது.

சட்டென்று எரியும் சிதையை நோக்கி ஆவேசத்தோடு - பாய்ந்தாள் அவள் கூடியிருந்தவர்கள் ஒன்றும் செய்யத்தோன்றாமல் “ஆ, ஐயோ!” என்று பரிதாபமும் பயமும் நிறைந்த