பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49


கவலை இல்லை. சோழனுக்கு வெற்றி கிடைத்தால் நம் கதி என்ன ஆகுமோ?”

“.........”

“வெற்றியா? தோல்வியா? - தோல்வியா? வெற்றியா? இரவு பகலாக இந்த இரண்டும் கெட்ட நிலைதான் இனிமேல்....”

“ஊரை வெல்வதற்கு முன்பே அவர் ஒர் உள்ளத்தை வென்றுவிட்டாரே! அது உனக்குத் தெரியுமா?”

“என்னம்மா சொல்கிறீர்கள்?”

“புரியவில்லையா? இதோ என் இந்த முன்கைகளில் துவண்டு சுழலும் வளைகளைப் பார்! இவை சொல்லும்”

“தோழீ! நீ கூறிய இரண்டுங்கெட்ட நிலை இந்த ஊருக்கு மட்டுமில்லை. இனிமேல் எனக்குந்தான்.”

“சோழன்தான் வெல்வான் என்கிறார்கள் சிலர். ஆமூர் மல்லர்தான் வெல்வார் என்கிறார்கள் சிலர். யார் வெல்வார் களோ? யார் தோற்பார்களோ? என்ன ஆகுமோ?”

“..........”

நாலைந்து நாட்கள் கழிந்தன. அன்று போலவே இன்றும் காலை நேரம் தெருவில் ஏதோ வெற்றி ஆரவாரம் கேட்கிறது. “வாழ்க! வாழ்க!” என்ற பேரொலி விண்ணை முட்டுகிறது. நக்கண்ணை ஆர்வம் அலைமோதும் உள்ளத்தோடு கன்னி மாடத்துக் கட்டுப்பாட்டையும் மறந்து தெருவிற்கு ஓடி வருகின்றாள். தண்டைகளும் சிலம்புகளும் கலின் கலின் என்று ஒலிக்கின்றன. தெருத் திண்ணையில் நின்று பார்க்கிறாள். பாலைப் பூசினாற் போன்ற நீண்ட கயல் விழிகள் மலர மலரப் பார்க்கின்றாள்.

அதே தேர்! அதே சோழ மன்னன்! அதே அழகு வெற்றிச் சங்குகள் முழங்க ஆமூரை வென்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்தான்! நக்கண்ணைக்கு அப்படியே ஒடிப்போய்த்