பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

புறநானூற்றுச் சிறு கதைகள்


“புலியைப் போன்ற நண்பர்கள் என்றால் என்ன? எலியைப் போன்ற நண்பர்கள் என்றால் என்ன? அதைப் பற்றியே எங்களுக்கு முதலில் தெரியாதே தெரிந்துகொண்ட பின்பல்லவா நாங்கள் உன் கேள்விக்கு விடை சொல்ல முடியும்!”

“பரவாயில்லை! என்னோடு வாருங்கள். புலியின் வாழ்க்கையையும் எலியின் வாழ்க்கையையும் உங்களுக்கு நிதரிசனமாகக் காட்டுகிறேன்.”

“ஐயையோ! புலியைப் பார்க்க வேண்டுமானால் காட்டுக்கல்லவா போக வேண்டும்!”

“ஆம், காட்டுக்குத்தான் போக வேண்டும் காட்டில்தான் மனிதனின் ஆதி நாகரிகம் தோன்றியது. காட்டில்தான் வாழ்வின் ஆதி உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அங்கே போய்த்தான் இந்த மாதிரிப் புதிர்க்ளை விடுவித்துக்கொள்ள முடியும்?”

சோழன் நல்லுருத்திரனைப் பின்பற்றித் துணிவாகக் காட்டுக்குப் போகிறோம் நாம். புலியையும் எலியையும் பற்றித் தெரிந்து கொள்ளத்தான்! புலியும் எலியும் நமக்குப் புதியவை அல்ல. அவைகளைப் பற்றி இந்த அரசன் நமக்குச் சொல்லி விளக்கப் போகின்றானே உண்மைகள்; அவைகள்தாம் முற்றிலும் புதியவை.

இதோ ஒரு பெரிய நெல் வயல், முதிர்ந்து தலைசாய்த்த நெற்கதிர்கள். இடையே வரப்பில் ஏதோ துள்ளி ஓடுகிறதே? அது என்ன? அருகில் நெருங்கிப் பார்க்கிறோம். அது ஒர் எலி, என்ன செய்கிறது? வயிலிலுள்ள நெற்கதிர்களை அறுத்து, தன் பற்களினால் கடித்துத் துண்டிக்கிறது. வரப்போரத்திலுள்ள பொந்தில் ஒவ்வொரு கதிராகக் கொண்டுபோய் வைத்துவிட்டு வருகிறது. திருட்டு வேலை திருட்டுச்சொத்து திருடிக் கொண்டு போய்த் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படுத்தாமல் பொந்துக்குள் கொண்டுபோய் நிரப்பி வைக்கிறது! எத்தனை அழகிய நெற்கதிர்கள் இப்படிப் பாழாகிவிட்டன? இன்னும் பாழாகப் போகின்றவை எத்தனையோ? பயனற்ற கொலை