பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 ⚫ போதி மாதவன்

பொறுமை என்னும் நீர் பெற்று, நினைவு, சிந்தனை யாகிய கிளைகள் பரப்பிக் கொண்டிருந்தது. அதிலே விரைவிலே தருமம் என்னும் கனி பழுக்கும் நேரம் வந்து விட்டது.

அன்று பூர்ணிமை,[1] புன்னகையுடன் விளங்கும் பூவையைப் போன்று, சந்திரன் வானத்திலிருந்து தண்ணொளி பரப்பிக் கொண்டிருந்தான். அகிலமெங்கும் அமைதி பரவியிருந்தது.

கௌதமர் ஆசைகளையும் பாசங்களையும் அறவே களைந்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ச்சியும் கூடிய மனத்துடன் முதலாவது தியானத்தில்[2] அமர்ந்-


  1. கி.மு. 538, வைகாசி மாதம். 6-ஆம் தேதி, புதன் கிழமை.
    ‘மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்’
  2. பௌத்த தரும முறைப்படி தியானம் என்பது சாந்தமான இடத்தில் சமாதியில் அமர்ந்து உள்ளறிவும் உண்மை ஆனந்தமும் பெறும் நிலை. தியானத்தில் மன உணர்வை இழந்து இன்பத்தில் இலயித்து விடுவதைப் புத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய திட்டப்படி, நான்கு வாய்மைகளையும் ஒப்புக்கொண்டு, அஷ்டாங்க மார்க்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள எட்டு வழிகளிலும் முறை தவறாமல் வாழ்ந்து வந்தாலே நிர்வாண முக்தி கிடைக்கும். ஆயினும் அத்தகைய வாழ்க்கைக்குத் தியானம் உதவியாயிருப்பதால், அதை அவர் மறுத்துத் தள்ளவில்லை. தியானங்கள் நான்கு வகை: ஏகாந்தமாக இருந்து, ஆராய்ச்சி செய்து, சிந்தித்து இன்ப நிலையில் இருத்தல் முதலாவது தியானம். ஆராய்ச்சியோ, சிந்தனையோயின்றி, ஆழ்ந்த அமைதி பெற்றிருத்தல்