பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 163

திருந்தார். அப்போது ஏற்பட்ட ஆனந்த உணர்ச்சியால் அவர் மன நிலை மாறவில்லை.

பிறகு சிந்தனையும் ஆராய்ச்சியும் நிகழாமல் தடுத்து உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தி, ஆனந்த உணர்ச்சியோடு, இரண்டாவது தியானத்தில் அமர்ந்தார்.

பூரண, அமைதியுடன் விழிப்பு நிலையிலே இருந்து கொண்டு, மூன்றாவது தியானத்தில் அமர்ந்திருக்கையில், அவருக்குப் பேரானந்த உணர்ச்சி ஏற்பட்டது.

பழைமையை யெல்லாம் மறந்து, இன்ப துன்பங்களை யெல்லாம் விலக்கி, அமைதியோடும் விழிப்போடும் அவர் நான்காவது தியானத்தையும் அடைந்தார்.

அப்போது அவர் தமது முற்பிறப்புக்களைப் பற்றி அறிய முடிந்தது. ஒவ்வொரு பிறவியிலும் அவருக்கு ஏற்பட்ட அநுபவங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. இரவின் முற்பகுதியிலேயே இவைகளை அவர் அறிந்து கொண்டார். அந்நிலையில் அஞ்ஞானம் தொலைந்து அறிவு துலங்கிற்று; இருள் மறைந்து ஒளி விளங்கலாயிற்று.

அதன் பிறகு உயிர்கள் தோன்றி மறைவதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். நல்வினை, தீவினை களுக்குத் தக்கபடி, உயிர்கள் பின்னால் நன்மையையும் தீமையையும் அடைவதை அவர் கண்டார். ஞான


    இரண்டாவது தியானம். மன விகாரங்களை யெல்லாம் அடக்கியிருத்தல் மூன்றாவது தியானம். துக்கத்தை அறவே ஒழித்து, சமநிலையான மனத்துடன் இன்ப நிலை. பெறுதல் நான்காவது தியானம். தியானங்களில் ஏற்படும் ஆனந்தத்தால் மன நிலை மாறாமல் இருக்கவேண்டும்.