பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-13-


பயிற்றப்பட வேண்டும்; பள்ளிக்கூடங்களில் பாடமாக்கப் படவேண்டும்.

போர் விளையாட்டு

இனிமேல் நம் நாட்டுப் பிள்ளைகள், அப்பா-அம்மா விளையாட்டு, கடை- பள்ளிக்கூடம் நடத்தும் விளையாட்டு, இரயில்-பஸ் வண்டிகள் விடும் விளையாட்டு, திருவிழா நடத்தும் விளையாட்டு முதலிய விளையாட்டுக்களுடன் போர் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். துப்பாக்கியால்-பீரங்கியால் சுடுவது போலவும், போர்க் கப்பல்களையும் வானவூர்திகளையும் செலுத்தி எதிரியின் ஊர்திகளையும் டாங்கிப் படைகளையும் கவச மோட்டார் அணிகளையும் நொறுக்கித் தள்ளுவது போலவும், பகைவர்களைத் திரும்பிப்பாராமல் ஓடோட விரட்டுவது போலவும் நம் நாட்டுப் பிள்ளைகள் இனி விளையாடவேண்டும்.

வீட்டுக் கொரு பிள்ளை

எந்த நாட்டில் இளையோர் முதல் முதியோர் வரை எல்லாரும் போரில் பங்கு கொண்டார்களோ அந்த நாட்டில் பிறந்தவர்கள் நாம். எந்த நாட்டில் ஆண் பெண் அனைவரும் போர் முயற்சியில் பங்கு கொண்டார்களோ அந்த நாட்டில் தோன்றியவர்கள் நாம். எனவே, அந்த இந்தியப் பெரு நாட்டில் பிறந்த மக்களாகிய நாம் நாற்பத்தைந்து கோடியினரும், அன்று போர்க் காலத்தில் நம் முன்னோர்கள் நடந்து கொண்டது போலவே இன்று நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு நமது பழைய வீர மரபினைப் புதுப்பித்துக் கொண்டோமாயின், எந்தப் பகைவனும் நம்மைப் பற்றி நினைக்கவும் அஞ்சுவான்.

நெருக்கடி நேரும்போது நாம் நாற்பத்தைந்து கோடி மக்களும் போர் மறவர்களாக மாறுவதற்கு ஒரு